தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 66ஆவது பொதுக்குழு கூட்டம் ஜனவரி 10 அன்று நடைபெற்றது. இது குறித்து அம்மன்றம் சார்பாக
வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் ...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...
சௌதி அரேபியா, தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 66ஆவது பொதுக்குழு கூட்டம், ஜனாப் M.M. இஸ்மாயில் அவர்களின் இல்லத்தில் வைத்து,
இம்மாதம் 10ஆம் தேதி, மக்ரிப் தொழுகைக்கு பின்பு இனிதே நடைபெற்று முடிந்தது, அல்ஹம்து லில்லாஹ்.
இந்த கூட்டத்தை இளவல் அன்வர் சயீத், இனிமையாக கிராஅத் ஓதி துவங்கி வைக்க, ஜனாப் செய்யது முஹம்மது ஷாதுலி அனைவர்களையும்
வரவேற்று அமர்ந்தார்.
அடுத்ததாக, மன்றத்தின் தலைவர் டாக்டர் முஹம்மது இத்ரீஸ் அவர்களின் தலைமை உரை அமைந்து இருந்தது. அவரின் உரையில் மன்றத்திற்கு
வந்துள்ள விண்ணப்பங்கள், அதற்க்கான நிதி ஒதுக்கீடு, ஷிபா மற்றும் இக்ராவின்வின் செயல்பாடுகள், அதற்கான ஒத்துழைப்புகள் போன்ற
கருத்துக்களை விவரித்தார்.
இக்ராவின் வேண்டுகோளுக்கு இணங்க, மாணவ கல்வி ஊக்க தொகைக்கான அனுசரணையாளர்கள் தேவை என்பதை அறிவித்ததும், பல சகோதரர்கள்
ஆர்வமுடன் தங்களை இணைத்துக்கொண்டார்கள்.
வரும் பிப்ரவரி 7ஆம் தேதி செயற்குழு கூடுவது என்றும், மார்ச் 7ஆம் தேதி பொதுக்குழு கூடுவது என்றும் தெரிவித்து, கூடும் இடம் குறித்து பின்னர்
அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தலைவர் அவர்களின் உரையை தொடர்ந்து, ஜனாப் மொஹுதூம் நெய்னா அவர்கள், இனிமையான இஸ்லாமிய கீதத்தை பாடினார்கள்.
அடுத்ததாக, மன்றத்தின் பொதுச் செயலாளர், ஜனாப் அஹமத் ரபீக் அவர்களின் உரை தொடர்ந்தது. அவர்களின் உரையில் சென்ற
பொதுக்குழுவிற்கும், நடைபெறும் பொதுக்குழுவிற்கும் இடைப்பட்ட காலத்தில், நம் மன்றத்தால் செய்யப்பட உதவிகளை குறிப்பிட்டார்.
சென்ற செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட அம்சங்களைப் பற்றி, விரிவாக எடுத்துக் கூறினார்.
அதில் குறிப்பாக, நம் மக்களுக்கு அரசாங்க மருத்துவ காப்பீடு திட்டத்தை பற்றி போதிய விழிப்புணர்வும், அதனை எப்படி பெறுவது என்ற விவரங்கள்
தெரியாமல் இருப்பதால், இந்த திட்டத்தை பற்றியும், அதனை நம் மக்கள் எப்படி பெறுவது போன்ற விவரங்களை தெரிவிக்கும்படி, நம் ஊரில் உள்ள
அனைத்து வலைதளங்களுக்கும் வேண்டுகோள் விடுவித்தார்.
அடுத்ததாக, புதிதாய் வந்துள்ள நான்கு சகோதரர்களான ஜனாப் அப்துல் காதர், ஜனாப் பைசல் ரஹ்மான், ஜனாப் உமர் பாரூக், ஜனாப் சுலைமான்
ஆகியோர் தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டு, மன்றத்தில் இணைந்தார்கள். அல்ஹம்து லில்லாஹ்.
தம்மாம் சரகத்திற்க்கு புதிதாய் வந்தவர்களும், மன்றத்தில் இணையாதவர்களும் கீழ்காணும் நம் சகோதரர்களை தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகோள்
விடுவிக்கப்பட்டது.
1. ஜனாப் அபூபக்கர் - ஜுபைல் நகரம் - 0507901470
2. ஜனாப் இப்ராஹிம் - தம்மாம் நகரம் - 0509438685
3. ஜனாப் அப்துல் அஜீஸ் - அல்கோபார் நகரம் - 0509094263
4. ஜனாப் கலீல் ரஹ்மான் - ராஸ்தனூரா நகரம் – 0553311365
* தற்போது உடல் நலம் இல்லாமல் ஊரில் இருக்கும், நம் மன்றத்தின் உறுப்பினர் ஜனாப் சேட்டு முஹம்மது அலி சாகிபு அவர்களின் நோய்
குணமடைந்து, நீடித்த ஆயுளுடன் வாழ பிரார்திக்கப்பட்டது.
* கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் சமயம், காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முன்னாள் பேராசிரியரும், காதிரிய்யா கொடிமர
சிறுநெய்னார் பள்ளியின் முன்னாள் இமாமுமான - காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சார்ந்த மவ்லவீ ஊண்டி எம்.எம். செய்யித் முஹம்மத்
பாக்கவீ ஆலிம், அவர்களின் மரண செய்தி கிடைக்கப்பட்டது. அவர்களுக்காக வல்ல ரஹ்மானிடம் பிரார்தித்து, இரங்கல் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது.
அதனை தொடர்நதது உறுப்பினர்களுடையே விவாதங்களும், ஆக்கப்பூர்வமான கருத்துக்களும், ஆலோசனைகளும் பரிமாறப்பட்டது.
தலைவர் அவர்களின் மன நிறைவான நன்றி உரைக்குப் பின்பு, மௌலவி நூஹு ஆலிம் மஹ்லரி அவர்களின் அருமையான மார்க்க உரை
நிகழ்த்தப்பட்டு, இந்த பொதுக்குழு கூட்டம் சிற்றுண்டியுடன் நிறைவாய் நிறைவு பெற்றது. அல்ஹம்து லில்லாஹ்.
இவ்வாறு அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சாளை S.I. ஜியாவுத்தீன்,
துணைத் தலைவர், தம்மாம் காயல் நற்பணி மன்றம். |