தமிழகத்தில் இம்மாதம் 14, 15, 16 தேதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, காயல்பட்டினம் கடற்கரையில் இன்று மாலை முதல் மக்கள் திரள் அதிகளவில் உள்ளது. காயல்பட்டினம் சுற்றுவட்டார ஊர்களிலிருந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் குடும்ப சகிதமாக கடற்கரையில் திரண்டுள்ளனர். தின்பண்ட வணிகர்கள் எல்லாப் பகுதிகளிலும் நிறைந்து காணப்படுகின்றனர்.
நெடுஞ்சாலை ரோந்துப் பிரிவு காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், பண்டிகை காலங்களில் கொச்சியார் தெருவுடன் வாகனங்களைத் திருப்பியனுப்பும் வழமை பேணப்படாமல், வாகனங்கள் கடற்கரை நுழைவாயில் வரை அனுமதிக்கப்பட்டதால், இரு சக்கர மற்றும் நாற்சக்கர வாகனங்கள் கடற்கரைக்குள் மக்கள் நுழைய வழி இல்லாத அளவுக்கு வாகனங்களை நிறுத்தி வைத்திருந்தனர்.
பற்றாக்குறைக்கு, நுழைவாயிலையொட்டி - அலங்கார வளைவுக்கு மேற்பகுதியில் வடபுறத்தில் ராட்டினமும், தென்புறத்தில் கபாப் இறைச்சிக்கடையும் அமைக்கப்பட்டிருந்தமையால் அங்கு திரண்டு நின்ற வாடிக்கையாளர் கூட்டம் போக்குவரத்துக்கு மேலும் இடையூறாக இருந்தது.
|