காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) மைதானத்தில், ரூபாய் 17 லட்சம் செலவில், பாட்மிண்டன் (ஷட்டுல் காக்) உள் விளையாட்டரங்கம் (Indoor Stadium) கட்டப்பட்டு வருகிறது. வரும் மே மாதம் திறப்பு விழா காணவுள்ளது.
நகரிலுள்ள ஷட்டுல் காக் விளையாட்டு ஆர்வலர்கள் - தரமான உள் விளையாட்டரங்கில் விளையாட விரும்பி நாள்தோறும் நிறைய நேரத்தையும், பொருளையும் செலவழித்து - வெளியூர்களுக்குச் சென்று விளையாடி வரும் நிலையுள்ளதைக் கருத்திற்கொண்டு, கே.எஸ்.ஸி. நிர்வாகத்தால் இந்த உள் விளையாட்டரங்கம் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது.
30க்கு 60 அடி என்ற பரப்பளவில் - 1800 சதுர அடியில் அமையும் இந்த உள் விளையாட்டரங்கம் முற்றிலும் இரும்பால் கட்டப்பட்டு, டாட்டா மெட்டல் தகடு கொண்டு மேற்கூரை அமைக்கவும், தரமான மரத்தைக் கொண்டு தரையமைக்கவும் (Wooden Floor) திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இரும்புச் சட்டங்கள் அமைக்கும் பணி நிறைவடையும் நிலையிலுள்ளது.
பணிகள் முழுமையாக நிறைவடைந்து, உள் விளையாட்டரங்கம் ஆயத்தமாக இன்னும் 3 மாத கால அவகாசம் எடுக்கும் என்றும், வரும் மே மாதத்தில் திறப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த உள் விளையாட்டரங்கப் பணிகளை முழுமையாக ஒருங்கிணைத்துச் செய்து வரும் ஃபஸ்லுல் ஹக், வெள்ளி செய்யித் அஹ்மத் ஆகியோர் தெரிவித்தனர்.
இவ்வரங்கத்தில், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) உறுப்பினர்கள் விளையாடலாம் என்றும், ஆர்வப்படும் பிறர் உறுப்பினரான பின் விளையாடலாம் என்றும் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) நிர்வாகிகள் தெரிவித்தனர்.
காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) சார்பாக..
தகவல்:
K.J.ஷாஹுல் ஹமீத்
M.N.ஹாஜி முஹம்மத்
M.B.S.சுலைமான்
L.S.முஹம்மத் அப்துல் காதிர் |