ஐக்கிய ராஜ்ஜியம் நாட்டில் இருந்து இயங்கும் காமன்வெல்த்
ஆணையத்தால் (COMMONWEALTH COMMISSION), காமன்வெல்த் குழுமத்தில் உள்ள வளர்ந்து வரும் நாடுகளில் கல்வி பணியாற்றி வருவோருக்கு என
FELLOWSHIP திட்டம் (COMMONWEALTH ACADEMIC FELLOWSHIPS) நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தேர்வாகும் கல்வியாளர்களுக்கு, ஐக்கிய
ராஜ்ஜியம் நாட்டிற்கு அழைப்பு வழங்கப்பட்டு - அவர்கள் சார்ந்த துறையில் உயர்தரமான குறுகிய கால மேற்படிப்புக்கு
வாய்ப்பளிக்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் - ஒவ்வொரு நாட்டிலும் இருந்து வெவ்வேறு அமைப்புகள் மூலம் பெறப்படுகின்றன. இந்தியாவில் இருந்து இந்த
திட்டத்தை பயன்படுத்த நாடுவோர், தங்கள் விண்ணப்பங்களை UNIVERSITY GRANTS
COMMISSION (UGC) என்ற இந்திய அரசு துறை மூலம் அனுப்ப வேண்டும்.
2013 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் - செப்டம்பர் 2012 இல் கோரப்பட்டன. நாடு முழுவதில் இருந்து பலர் தங்கள் விண்ணப்பங்களை
சமர்ப்பித்திருந்தனர். பெறப்பட்ட பலவேறு விண்ணப்பங்களில் இருந்து 62 விண்ணப்பங்களை பரிந்துரை செய்து UGC அமைப்பு, காமன்வெல்த்
ஆணையத்திற்கு அனுப்பியது. அதில் இருந்து 34 விண்ணப்பங்களை காமன்வெல்த் ஆணையம் தேர்வு செய்து - அவர்களுக்கு ஐக்கிய ராஜ்ஜியம்
செல்ல அழைப்பு விடுத்தது.
இத்திட்டம் மூலம் ஐக்கிய ராஜ்ஜியம் செல்ல வாய்ப்பு பெற்றவர்களில்
ஒருவர் - பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் காயல்பட்டினம் குத்துக்கல் தெருவினை பூர்விகமாக கொண்ட டாக்டர்
மும்தாஸ் பேகம் ஆவார்.
டாக்டர் மும்தாஸ் பேகம் - செப்டம்பர் 2013 முதல் நவம்பர் 2013 வரை ஐக்கிய ராஜ்ஜியம் சென்று, அங்குள்ள லிவர்பூல் ஜான் மூர்ஸ்
பல்கலைக்கழகத்தில் பயிற்சிகள் மேற்கொண்டு தற்போது நாடு திரும்பியுள்ளார்.
லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் பள்ளிக்கூட கல்வி, ஓய்வு நேரம் மற்றும் விளையாட்டு துறை இயக்குனர்
பேராசிரியர் விக்கர்மன்னுடன் டாக்டர் மும்தாஸ் பேகம் ...
நாடு திரும்பிய டாக்டர் மும்தாஸ் பேகம் குறித்து தினத்தந்தி ஞாயிறு மலர் டிசம்பர் 22, 2013 பதிப்பில் வெளியிட்ட செய்தி ...
டாக்டர் மும்தாஸ் பேகம் - காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு பிரத்தியேக பேட்டி வழங்கியுள்ளார். அப்பேட்டி விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும்.
தினத்தந்தி நாளிதழ் நகல்:
முஹம்மத் முக்தார்,
சென்னை. |