காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க கால்பந்து அணியின் முன்னாள் வீரர் - அண்மையில் காலமான எம்.எஸ்.எல்.ஜாமிஉல் அக்பர் நினைவாக, தனியார் நிறுவனமான பி.எச்.எம்.ரெஸ்டாரண்ட் அனுசரணையில், “மர்ஹூம் ஜாமிஉல் அக்பர் நினைவு கால்பந்துப் போட்டி”யை, ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் ஆண்டுதோறும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டு போட்டிகள் இம்மாதம் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) துவங்கியது.
ஜனவரி 16ஆம் நாளன்று நடைபெற்ற போட்டியில், காயல்பட்டினம் காலரி பேர்ட்ஸ் அணியும், புன்னைக்காயல் செயின்ட் ஜோஸப் அணியும் மோதின.
முதற்பாதி ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்றது. ஒரு கட்டத்தில், புன்னைக்காயல் அணி வீரர் அற்புதமாக ஒரு கோல் அடிக்க, 1-0 என்ற கோல் கணக்கில் அவ்வணி முதற்பாதியில் முன்னணியிலிருந்தது.
இரண்டாவது பாதியில், ஆட்டத்தின் வேகம் கூடியது. எப்படியும் கோல் அடித்தாக வேண்டும் என்ற முனைப்புடன் ஆடிய காலரி பேர்ட்ஸ் அணி ஒரு கோல் அடித்தது. சிறிது நேரத்தில் மீண்டும் ஈரணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் 2-2 என்ற கோல் கணக்கில் அவை சமநிலையிலிருந்தன.
ஆட்டம் நிறைவடைய ஓரிரு நிமிடங்கள் மட்டுமே இருந்த நிலையில் காலரி பேர்ட்ஸ் அணி மீண்டும் ஒரு கோல் அடித்ததால், 3-2 என்ற கோல் கணக்கில் அது வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தது.
இன்று (ஜனவரி 17) நடைபெறவுள்ள போட்டியில், திருநெல்வேலி ரீடீமர்ஸ் அணியும், வி.கே.புரம் ஜெயராம் அணியும் மோதவுள்ளன.
சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பாக..
தகவல் & படங்கள்:
‘PHM’ ஷேக்னா
முந்தைய போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |