நடப்பாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி வாங்கும் 1 கோடியே 84 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் இலவச உணவுப் பொருட்கள் காயல்பட்டினத்திலுள்ள நியாய விலைக் கடைகளில் இம்மாதம் 07ஆம் தேதி வினியோகிக்கப்பட்டது.
02ஆவது 05ஆவது மற்றும் 13ஆவது வார்டு நியாய விலைக் கடைகளில் நடைபெற்ற பொங்கல் இலவச பொருட்கள் வினியோகத்தை, காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாஷேக், 02ஆவது வார்டு உறுப்பினர் வி.எம்.எஸ்.முஹம்மத் செய்யித் ஃபாத்திமா, 05ஆவது வார்டு உறுப்பினர் எம்.ஜஹாங்கீர், 13ஆவது வார்டு உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பொங்கல் இலவச பொருட்கள் பொதியில், பச்சரிசி ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ ஆகியவற்றுடன், இதர பொருட்கள் வாங்குவதற்காக ரூபாய் 100 பணமும் உள்ளடக்கம்.
தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர் |