காயல்பட்டினம் சமூக நல்லிணக்க மையம் - தஃவா சென்டர் சார்பில், இஸ்லாமிய அழைப்புப் பணி செய்தல் தொடர்பான பயிற்சி வகுப்புகள் பல்வேறு தலைப்புகளில் தொடராக நடத்தப்பட்டு வருகிறது. 3ஆம் பிரிவு மாணவ-மாணவியருக்கு நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பு குறித்து, அந்நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
அல்லாஹ்வின் பேருதவியால் கடந்த மூன்று வருடங்களாக நமது தஃவா சென்டர் சார்பாக நடத்தப்பட்டு வரும் பிறமத சகோதரர்களுக்கு எவ்வாறு தஃவா செய்வது? என்ற தஃவா & தர்பிய்யா பயிற்சி வகுப்பானது தற்போது மூன்றாம் Batch ஏக இறைஅருளால் சிறப்புற நடைபெற்று வருகிறது அல்ஹம்துலில்லாஹ்.
இதன் தொடர்ச்சியாக 3rd Batch-ன் மூன்றாம் வகுப்பு "நாத்திகவாதிகளுக்கு எவ்வாறு தஃவா செய்வது?" என்ற தலையங்கத்தில் கடந்த 12.01.2014 ஞாயிறு அன்று சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வகுப்பை நடத்தித்தந்திட சென்னையை சார்ந்த சகோ.ரியாஸ் அஹமத்(முன்னாள் நாத்திக சிந்தனையாளர்) அவர்கள் வகுப்பை நடத்தி தந்தார்கள்.
சகோதரர் பற்றிய சிறிய அறிமுகம்:
இவர் இஸ்லாமியராக பிறந்து தன் இளம் வயதில் நாத்திகவாதியாக (புகழேந்தி என்ற பெயருடன்) மாறி, மறுபடியும் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தை ஏற்று தற்போது தாய்யியாகவும் கட்டிட இன்ஞ்னியராகவும் பணிபுரிந்துக் கொண்டு வருகின்றார்.
அல்லாஹ்வின் பேருதவியால் வகுப்பு காலை 10 மணி முதல் 1 வரை நடைபெற்றது. இதில் நாத்திகம் பற்றி வகுப்பில் அலசப்பட்ட கேள்விகள் பின்வருமாறு ................
General Questions
1. நாத்திகம் எப்போது உருவானது? எந்த காரணத்திற்கு உருவாக்கப்பட்டது? அதன் கொள்கைகள் என்ன?
2. பெயரளவு முஸ்லிம்கள் இந்த நாத்திக சிந்தனையைப் பற்றி பேசுகிறார்களோ இவர்களுக்கு எவ்வாறு தஃவா செய்வது?
3. ஆடு, மாடு, கோழிகளை ஹலால் பண்ண வேண்டும் என்று கூறும் நீங்கள் ஏன் மீனை ஹலால் செய்வதில்லை?
4. தாய், தந்தை நீ, நான் என அனைவரையும் கடவுள்; என்று கூறுகிறார்களே இவர்களுக்கு எவ்வாறு தஃவா செய்வது?
5. இயற்கையாகவே எல்லாம் இயங்குகின்றது? என்று கூறுபவர்களிடம் எவ்வாறு தஃவா சொல்வது?
6. கடவுளை ஏன் அவன், இவன் என்று கூறுகிறீர்கள்?
7. கடவுளைப் படைத்தது யார் என்று கேட்டால் எப்படி அணுகுவது?
8. அல்லாஹ்வின் அத்தாட்சியை சொன்ன பின்னரும் நம்பாத நாத்திகா;களிடம் எவ்வாறு தஃவா செய்வது?
9. இறைவன் சர்வ வல்லமை உடையவனாக இருக்கின்றான் என்றால் ஊனம், கூன், குருடுகளை படைத்தது ஏன்?
10. பட்டுபுடவையும், தங்கமும் ஆண்களுக்கு ஏன் தடை?
11. ஆழ்ந்து சிந்திக்கும் நிலையில் நாம் இறைவனை உணர முடியும் என்று நாத்திகர்கள் கூறுகிறார்களே! விளக்கவும்(அத்வேதம்)
12. பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரா? எதிர்த்தாரா?
13. கடவுளை படைத்தது யார் என்று வினவும் நாத்திகருக்கு பதில் கூறுவது?
Question Related to Islam
1. இறந்தபின் வாழ்வு இருக்கமுடியுமா? மறுமையை எவ்வாறு எடுத்து செல்வது?
2. குர்ஆன் என்பது பல தோழா;கள் எழுதி கொடுத்த ஒரு புத்தகம்தானே?
3. ஷிர்க்கூடாது என்று கூறும் இஸ்லாம் ஏன் ஆதாமுக்கு மலக்குகளையும், ஷைத்தான்களையும் அல்லாஹ் ஸூஜூது செய்ய சொன்னான்?
4. சொர்க்கத்தில் ஆதாமை பார்;த்து இந்த கனியை சாப்பிடாதே என்று கூறிய இறைவன், ஆதாம் சாப்பிடுவார் என்று தொpந்த பின்னரும் ஏன் அந்த மரத்தை வைத்தான்? அதை நீக்கிவிடலாமே?
5. மனிதர்களில் அநேகரை நாம் நரகத்திற்கு என்றே படைத்திருக்கின்றோம் என்று கூறுகின்ற அல்லாஹ் எவ்வாறு அன்புடையோனாக இருக்கமுடியும்?
6. விதியை நம்ப மறுக்கின்றனரே, எவ்வாறு நம்ப வைப்பது?
7. ஷைத்தானைப்பற்றி நாத்திக ரீதியாக விளக்கவும்?
Question Related to Evolution Theory
1. Gene Technology & Fossils வைத்து Evolution Theory நீருபிக்கப்பட்டதாக கூறுகிறார்களே! அதைப்பற்றி கூறவும்?
2. பரிணாம வளர்ச்சி கோட்பாடு பொய் என்பதை எவ்வாறு நிரூவிப்பது?
"உங்களிடம் இரு கேள்வி"
1. முஸ்லிமாக பிறந்த நீங்கள் நாத்திகராக மாறியதற்கு காரணம்?
2. நாத்திகத்தில் இருந்த உங்களை வல்லோன் அல்லாஹ்வின் வழியாகிய இஸ்லாத்திற்கு திருப்பியது எது?
3. அல்லாஹ் இருக்கின்றானா? மறைவாக இருக்கும் அல்லாஹ் இருக்கின்றான் என்பதை எவ்வாறு எடுத்து சொல்வது?
மறுமையை பார்காத நாம் ஏன் மறுமையை நம்ப வேண்டும்?
ஷைத்தான் தவறு செய்வான் என்று அறிந்த இறைவன் ஏன் அவனை படைக்க வேண்டும்?
ஏன் நபிமார்களுக்கு சட்டங்களை மாற்றி கொண்டே இருக்க வேண்டும்? இதன் காரணமாகவே பல கொள்கைகள் உலகில் உருவாகியது
போன்ற கேள்விகளுக்கு மாணவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் தெளிவாக விளக்கம் தந்தார்கள்.அதனை தொடர்ந்து சந்தேகத்தை நீக்கும் வண்ணம் கேள்வி-பதில் கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பின்பு மதியம் 3.30 முதல் அஸர் வரை துஆ மனனம் வகுப்பை சகோ.பிலால் அவர்கள் நடத்தினார்கள். அதனைத் தொடர்ந்து தாய்யிகளாக பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் மாணவர்கள் தங்கள் உள்ளதை தூய்மை படுத்திக் கொள்ளும் பொருட்டு மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை "இறையன்பே இனிதானது" எனும் தலைப்பில் சகோ. ஜக்கரிய்யா அவர்கள் நடத்தினார்கள். இதில் ஒரு தாய்யியாக இருக்கக் கூடியவர்கள் அல்லாஹ்விடம் எப்படி நெருங்க வேண்டும் அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்றும் விளக்கமளித்தார்கள்.
மாலை 5.30 மணி முதல் தாய்யிகளுக்கான பேச்சு பயிற்சியில் சென்ற வகுப்பில் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் சிறிது நேரம் உரையாற்றினார்கள்.
சென்ற முதல் வகுப்பினை நினைவூட்டும் விதமாக மாணவர்களுக்கு தேர்வும் நடத்தப்பட்டது என்பது குறுப்பிடத்தக்கது.
இறுதியாக கப்பாராஉடன் வகுப்பு இனிதே முடிவு நடை பெற்றது. வல்லோன் அல்லாஹ்வுக்கே வான் புகழ் உரித்தாகட்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |