காயல்பட்டினம் நகர்மன்ற பிரதான கட்டிடம் சுமார் 50 ஆண்டுகள் பழமையானது. பஞ்சாயத் தகுதியில் இருந்தப்போது கட்டப்பட்ட இந்த கட்டிடம், தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. இக்கட்டிடத்தை புதுப்பிக்க தமிழக அரசு நடப்பு பட்ஜெட்டில் (2013-14), காயல்பட்டினம் உட்பட சில நகராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததது. இது குறித்த அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டிருந்தார்.
இவ்வகைக்காக உள்கட்டமைப்பு மற்றும் இயக்குதல் & வெற்றிடம் நிரப்புதல் (INFRASTRUCTURE GAP FILLING FUND) நிதியில் இருந்து, காயல்பட்டினம் நகராட்சிக்கு 1.5 கோடி ரூபாய் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இத்திட்டத்திற்கான நிர்வாக அனுமதியும் (ADMINISTRATIVE SANCTION) - சென்னை நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் (CMA) அலுவலகத்தில் இருந்து வழங்கபட்டுள்ளது.
இப்பணிக்கு விரிவான திட்ட மதிப்பீடு (DETAILED ESTIMATE) மற்றும் வடிவமைப்பு (DESIGN) போன்றவற்றை தயார் செய்ய தகுதியான கலந்தரிதற்குரியர் (CONSULTANT) நிறுவனத்திடம் ஒப்பந்தப்புள்ளி கோரி ஆகஸ்ட் 30 தேதிய தினத்தந்தி நாளிதழில் - காயல்பட்டினம் நகராட்சி சார்பாக - விளம்பரம் வெளியிடப்பட்டது.
பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் - செப்டம்பர் 20 அன்று மாலை நகராட்சியில் திறக்கப்பட்டது. அதில் சென்னையை சார்ந்த RAYAN IBRAHIM ARCHITECTS PVT. LTD என்ற நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, ஆவணங்கள் தயாரிக்கும் பணி தற்போது நிறைவுறும் தருவாயில் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் - முதல் கட்டமாக ஒதுக்கப்பட்ட 1 கோடி ரூபாயில் இருந்து, முதல் பாதியான 50 லட்ச ரூபாய் நிதியினை - நகராட்சி நிர்வாகத்துறை தற்போது, காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கியுள்ளது.
தகவல்:
நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை.
|