தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடையை நீட்டிகக் வெண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேயிடம் ஜெயதுரை எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
ஜெயதுரை எம்.பி. அறிக்கை வருமாறு:-
காயல்பட்டினம் ரயில் நிலையப் பிரச்சினை தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேயை சந்தித்துப் பேசினேன். அப்போது, காயல்பட்டினம் ரயில் நிலையத்தில், தற்போது 12 பெட்டிகள் கொண்ட ரயில் நிற்கும் அளவுக்குத்தான் பிளாட்பாரம் உள்ளது. ஆனால், இந்த வழியே செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் 18 பெட்டிகள் கொண்டது. இதனால் செந்தூர் எக்ஸ்பிரஸின் 6 பெட்டிகள் பிளாட்பாரத்தில் இருந்து விலகி நிற்கின்றன.
ரயில் நிலைய நடைமேடையை ரூ.30 லட்சம் செலவில் நீட்டிக்கும் பணி தனியார் ஒப்பந்ததாரரிடம் வழங்கப்பட்டது. ஆனால், ரயில்வே அதிகாரிகள் நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி பணியை நிறுத்திவிட்டனர்.
இப்பணி தொடர தேவையான நிதி ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். நடவடிக்கை எடுப்பதாக அமைச்சரும் உறுதியளித்தார். எனவே, காயல்பட்டினம் ரயில் நிலைய நடைமேடை விரைவில் நீட்டிக்கப்படும். அங்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நன்றி:
‘தி இந்து’ தமிழ் நாளிதழ் (ஜனவரி 16, 2014) |