நாளை ஜனவரி 19 ஞாயிறு அன்று, மாலை 6 மணியளவில், அ.தி.மு.க. பொதுக்கூட்டம் காயல்பட்டினம் சீதக்காதி திடலில் நடைபெறவுள்ளது.
சுற்றுலாத்துறை அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன், தலைமை கழக பேச்சாளர் வைகை பாரதி வாஹித், கழக மீனவரணி இணை செயலாளர் எஸ்.ஜெனிபர் சந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுவர் என்றும்,
நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக் உட்பட பலர் முன்னிலை வகிப்பர் என்றும்,
கட்சியின் மூத்த உறுப்பினர் எஸ்.ஏ. முஹைதீன் தலைமை தாங்குவார் என்றும் இக்கூட்டம் குறித்து நகரில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம் தெரிவிக்கிறது.
தகவல்:
மாஸ்டர் கம்ப்யூட்டர் அகாடமி
|