மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் - ஃபாஸிச எதிர்ப்புப் பிரச்சாரம், அனைத்துக் கட்சி தலைவர்கள் சந்திப்பு ஆகியவற்றை நடத்திட, 09ஆம்
தேதியன்று நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட
செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக இன்று காயல்பட்டினம் உட்பட தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இது குறித்து
அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
நமது இந்திய நாடு பழம் பெருமை வாய்ந்த நாடு. வேற்றுமையில் ஒற்றுமை நமது தாரக மந்திரம். இன்று நமது நாட்டின் ஜனநாயகத்திற்கும் ,சமூக
நீதிக்கும்,மதச்சார்பற்ற கொள்கைக்கும் சங்பரிவார ஃபாசிச சித்தாந்தம் பெரும் சவாலாக இருந்து வருகின்றது. சகோதரத்துவ வாஞ்சையுடன் வாழ்ந்து
வரும் நம் தேச மக்களிடத்தில் வகுப்புவாத தீயை மூட்டி அதில் சங்பரிவார அமைப்புகள் குளிர்காய்ந்து வருகின்றன. இதன் சமீபத்திய உதாரணம்
உ.பி. முஸஃப்பர் நகர் கலவரம்.
இந்த சங்கபரிவார அமைப்புகளின் அரசியல் பிரிவான பாரதிய ஜனதா கட்சியின் மதவாதம், ஊழல், போலி தேசிய வாதம், தீவிர வாதம் போன்ற பாசிச
முகத்தை தோலுரித்துக் காட்டும் முகமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாசிச எதிர்ப்பு பிரச்சார இயக்கத்தை மாநில அளவில் நடத்த உள்ளது.
இதன்படி ஜனவரி 2014 முதல் ஏப்ரல் 2014 வரை மாநிலம் முழுவதும் பாசிசத்திற்கு எதிரான நோட்டீஸ் மற்றும் போஸ்டர் பிரச்சாரம், சமூக
வலைதளங்களில் பிரச்சாரம், பொதுக்கூட்டங்கள் மற்றும் தெருமுனைக் கூட்டங்களை நடத்த உள்ளது. மேலும் அரசியல் தலைவர்கள், அனைத்து
இயக்க தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை சந்தித்து பாசிசத்திற்கு எதிராக ஒருங்கிணைக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட உள்ளது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பாசிச எதிர்ப்பு பிரச்சார இயக்கத்தின் துவக்க தினமான இன்று பா. ஜ. க. வின் இரட்டை வேடத்தை மக்களுக்கு
தெளிவு படுத்தும் விதமாக தமிழக முழுவதும் நோட்டீஸ் பிரச்சாரம் நடைபெற்றது.அதில் ஒரு அங்கமாக இன்று (18.01.14) தூத்துக்குடி
மாவட்டத்தில் பேருந்து, மற்றும் ரயில் நிலையங்களில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |