காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க கால்பந்து அணியின் முன்னாள் வீரர் - அண்மையில் காலமான எம்.எஸ்.எல்.ஜாமிஉல் அக்பர் நினைவாக, தனியார் நிறுவனமான பி.எச்.எம்.ரெஸ்டாரண்ட் அனுசரணையில், “மர்ஹூம் ஜாமிஉல் அக்பர் நினைவு கால்பந்துப் போட்டி”யை, ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் ஆண்டுதோறும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டு போட்டிகள் இம்மாதம் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) துவங்கியது.
ஜனவரி 17ஆம் நாளன்று மாலையில் நடைபெற்ற போட்டியில், திருநெல்வேலி ரீடீமர்ஸ் அணியும், வி.கே.புரம் ஜெயராம் அணியும் மோதின.
முதற்பாதியில் ஈரணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமனில் இருந்தன. இரண்டாவது பாதியில், ஆட்டம் நிறைவடைய 20 நிமிடங்கள் இருந்த நிலையில் திருநெல்வேலி அணி ஒரு கோல் அடித்து, 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இன்று (ஜனவரி 18) காலை 07.00 மணிக்கு நடைபெற்ற போட்டியில், திருநெல்வேலி ரீடீமர்ஸ் அணியும், நாசரேத் மர்காஷிஸ் அணியும் மோதின. இப்போட்டியின் முதற்பாதியில் ஒரு கோல், இரண்டாவது பாதியில் இரண்டு கோல் என மொத்தம் 3 கோல்கள் அடித்த திருநெல்வேலி அணி, 3-0 என்ற கோல் கணக்கில் வென்று, அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.
இன்று மாலையில் நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் அவ்வணி, காயல்பட்டினம் காலரி பேர்ட்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
சுற்றுப்போட்டிக் குழுவின் சார்பாக..
தகவல் & படங்கள்:
‘PHM’ ஷேக்னா
முந்தைய போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |