மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து சுற்றுப்போட்டியின் – இன்று நடைபெற்ற நான்காவது மற்றும் கடைசி காலிறுதிப் போட்டியில், திருவனந்தபுரம் ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் அணி வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 49ஆம் ஆண்டு சுற்றுப்போட்டிகள் மே 08ஆம் நாளன்று துவங்கியது.
இன்றைய போட்டி நான்காவது மற்றும் கடைசி காலிறுதிப் போட்டியாகும். 16.40 மணிக்குத் துவங்கிய இப்போட்டியில் - நேற்றைய (மே 21 அன்று நடைபெற்ற) போட்டியில் விளையாடி வெற்றிபெற்ற திருவனந்தபுரம் எஸ்.எம்.ஆர்.சி. அணியும், இம்மாதம் 19ஆம் நாளன்று நடைபெற்ற போட்டியில் விளையாடி வெற்றிபெற்ற திருவனந்தபுரம் ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் அணியும் மோதின.
துவக்கம் முதல் இறுதி வரை ஈரணியினரும் விறுவிறுப்புடன் விளையாடினர். இரண்டு அணியினருக்கும் அவ்வப்போது கோல் அடிக்க சமமான வாய்ப்புகள் கிடைத்தபோதிலும், அவை பலனளிக்கவில்லை.
ஆட்டத்தின் 31ஆவது நிமிடத்தில் ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் அணி வீரர் அல்பி ஓஸஃப் தனக்குக் கிடைத்த வாய்ப்பை அற்புதமாகப் பயன்படுத்தி கோலாக்கினார். அதன் பிறகு ஆட்ட நிறைவு வரை எந்த அணியும் கோல் அடிக்காததால், 1-0 என்ற கோல் கணக்கில் திருவனந்தபுரம் ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் அணி வெற்றி பெற்று, அரையிறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது.
இம்மாதம் 24ஆம் நாளன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் அவ்வணி, ஏற்கனவே அரையிறுதிக்குத் தகுதி பெற்ற கேரளா பொலிஸ் - மலப்புரம் அணியை எதிர்த்து விளையாடும்.
இன்றைய போட்டியைக் காண, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் திரளாக வந்திருந்தனர்.
நாளை இச்சுற்றுப்போட்டியின் முதலாவது அரையிறுதிப் போட்டியாகும். இதில், இம்மாதம் 10ஆம் நாளன்று நடைபெற்ற முதலாவது காலிறுதிப் போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற - திருவனந்தபுரம் கோஸ்டல் கால்பந்துக் கழக அணியும், இம்மாதம் 18ஆம் நாளன்று நடைபெற்ற 3ஆவது காலிறுதிப் போட்டியில் விளையாடி வெற்றி பெற்ற காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க அணியும் மோதுகின்றன.
போட்டி நிரல் வருமாறு:-
மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (2013) மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து 15ஆம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |