காயல்பட்டினம் ஒருவழிப்பாதையான தாயிம்பள்ளி - பெரிய நெசவுத் தெரு குறுக்குச் சாலை, பெரிய நெசவுத் தெரு, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, கூலக்கடை பஜார் பகுதிகளில் புதிய சாலை அமைக்கும் பணி, கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26ஆம் நாளன்று துவங்கி, இடையிடையே பல்வேறு காரணங்களைக் காட்டி இடைநிறுத்தம் செய்யப்பட்டு, இறுதியாக இம்மாதம் 15ஆம் நாளுடன் பணிகள் நிறைவடைந்தது.
கடைசி கட்டப் பணியாக, தாயிம்பள்ளி - பெரிய நெசவுத் தெரு குறுக்குச் சாலையிலும், எல்.கே.துவக்கப்பள்ளி, எல்.கே.மேனிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் அருகிலும் தலா ஒரு வேகத்தடை வீதம் மொத்தம் 3 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒருவழிப்பாதையில் புதிய சாலை அமைத்து முடிக்கப்பட்டதையடுத்து, அவ்வழியே பேருந்து போக்குவரத்து எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே இருந்து வந்தது. இந்நிலையில், இம்மாதம் 19ஆம் நாள் முதல் ஒருவழிப்பாதையில் பேருந்து போக்குவரத்து துவங்கியுள்ளது.
இதனையடுத்து, பல்வேறு இடங்களுக்கு பேருந்து பயணம் மேற்கொள்வோர் பெரிய நெசவுத் தெரு - எல்.கே.லெப்பைத்தம்பி சாலை சந்திப்பில் உள்ள பேருந்து நிறுத்தத்திலும் நின்று பேருந்துகளில் ஏறிச் செல்லத் துவங்கியுள்ளனர்.
ஒருவழிப்பாதையில் புதிய சாலை அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |