DCW தொழிற்சாலை - உப்பில் இருந்து, காஸ்டிக் சோடா என்ற பொருளை தயாரிக்க 1958ஆம் ஆண்டு
காயல்பட்டினம் பகுதியில் நிறுவப்பட்டது. 2000 ஏக்கருக்கும் மேற்பட்ட இடங்களை அரசு மூலம் பெற்ற DCW
தொழிற்சாலை, தற்போது வளர்ந்து - PVC, TRICHLOROETHYLENE, SYNTHETHIC RUTILE உட்பட பல்வேறு
பொருட்களை தயாரிக்க துவங்கியுள்ளது. 2007ம் ஆண்டு - இந்நிறுவனம், 50 MW சக்திக்கொண்ட, நிலக்கரி
அடிப்படையிலான மின் உற்பத்தி மையத்தை உருவாக்கவும் அனுமதிபெற்றது.
இத்தொழிற்சாலை மூலமாக ஏற்படும் மாசு குறித்து ஆரம்பத்தில் இருந்து அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தொழிற்சாலையின் கழிவுகள் - சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன என பல்வேறு அமைப்புகள் -
ஆவணப்படுத்தியுள்ளன. மேலும் - இத்தொழிற்சாலையினால், புற்று நோய் உட்பட பல்வேறு நோய்கள்,
காயல்பட்டினம் உட்பட அருகாமையில் உள்ள பல பகுதிகளில் பரவியுள்ளதாக, குற்றச்சாட்டுகள்
எழுந்துள்ளன.
இதற்கிடையே - இத்தொழில் நிறுவனம், 2010ம் ஆண்டு, தனது உற்பத்தியை விரிவாக்க, விண்ணப்பத்தினை
அரசிடம் சமர்ப்பித்தது. அதன்படி -
*** தற்போது உற்பத்தி செய்யப்படும் TRICHOLORO ETHYLENE (TCE) ஆண்டிற்கு 7200 டன் என்ற அளவில்
இருந்து 15480 டன் என்ற அளவிற்கு உயர்த்தப்படும்.
*** POLY VINYL CHLORIDE (PVC) உற்பத்தி ஆண்டிற்கு 90,000 டன் என்ற அளவில் இருந்து 150,000 டன் என்ற
அளவிற்கு உயர்த்தப்படும்.
*** புதிதாக CHLORINATED PVC (CPVC) உற்பத்தி 14,400 டன் அளவிற்கு தொடங்கப்படும்.
*** நிலக்கரி அடிப்படையிலான மின்சார உற்பத்தி - தற்போதைய 58.27 MW அளவில் இருந்து 108.27 MW
அளவிற்கு உயர்த்தப்படும்.
இந்த விரிவாக்கம் திட்டம் குறித்து நவம்பர் 29, 2011 அன்று நடந்த மக்கள் கருத்து
கேட்பு கூட்டத்தில் - காயல்பட்டினம் சார்ந்த சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் எதிர்ப்பு
தெரிவித்தனர்.
இருப்பினும் - செப்டம்பர் 2012இல், இந்த திட்டத்தினை பரிசீலனை செய்த மத்திய வன மற்றும் சுற்றுச்சூழல்
அமைச்சகத்தின் துணைக்குழு (EXPERT APPRAISAL COMMITTEE) - இத்திட்டத்திற்கு அனுமதி வழங்க
பரிந்துரைத்தது.
இந்த திட்டத்தினை எதிர்த்து - காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு (KEPA) ஒருங்கிணைப்பில்,
காயல்பட்டினத்தில் ஒரு நாள் கடையடைப்பு, நவம்பர் 29, 2012 அன்று
நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து நடந்த போராட்டங்கள், புகார் மனுக்களை தொடர்ந்து - DCW
தொழிற்சாலையின் விரிவாக்கத் திட்டத்திற்கான அனுமதி, நிலுவையில் வைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில், திடீரென நடப்பாண்டு பிப்ரவரி 24 அன்று - இந்த
திட்டத்திற்கு மத்திய அரசு - ஒப்புதல் வழங்கி அறிவிப்பு வெளியிட்டது.
மத்திய அரசின் ஒப்புதல் குறித்த தகவலை - நாளிதழ்களில் வெளியிடவேண்டும் என சட்ட விதிகள்
தெரிவிக்கின்றன. பிப்ரவரி 24 அன்று வழங்கப்பட்ட அனுமதிக்குறித்த தகவலை, DCW தொழிற்சாலை - மார்ச் 6
அன்று நாளிதழ் ஒன்றில் வெளியிட்டது. அதில் - ஒப்புதல் குறித்த விபரங்களை பதிவிறக்கம் செய்யவேண்டிய
அரசு இணையதள முகவரியை தவறாக வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் - ஒப்புதல் குறித்த விபரங்கள், மார்ச் 10க்கு மேல் தான் அரசு இணையதளத்திலும்
வெளியிடப்பட்டது.
மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டதை அடுத்து - விதிமுறைகள்படி, DCW தொழிற்சாலை, மாநில அரசின் கீழ்
இயங்கும், தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியத்திடம் இரண்டு கட்ட அனுமதி பெறவேண்டும்: ஒன்று,
கட்டுமானத்திற்கு வழங்கப்படும் CONSENT TO ESTABLISH (CTE) என்ற அனுமதி. மற்றொன்று - உற்பத்தியை
துவக்க CONSENT TO OPERATE (CTO) என்ற அனுமதி.
ஏப்ரல் 8, 2014 அன்று தொழிற்சாலையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் ஏப்ரல்
16, 2014 அன்று நடந்த தொழில்நுட்ப குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் - DCW தொழிற்சாலையின்
விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியான PVC உற்பத்தி பெருக்கம் (90,000 TPA - 1,50,000 TPA) மற்றும் புதிதாக
CPVC (14,400 TPA) உற்பத்தி துவக்கம் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்,
நிபந்தனைகளுடன் - மிகவும் துரிதமாக - CTE வழங்கியுள்ளதாக தெரிகிறது.
அந்த நிபந்தனைகள் - DCW தொழிற்சாலை, அடுத்த கட்டமாக - CTO கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கும்போது,
தொழிசாலையை சுற்றி உள்ள 10 கிலோமீட்டர் பகுதிகளில், தகுதிவாய்ந்த நிறுவனம் கொண்டு, VCM மூலம்
ஏற்படும் உடல்நலன் பாதிப்பு குறித்த ஆய்வுகள் மேற்கொண்டு, அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்
எனக்கூறுகிறது.
"The unit shall conduct annual health evaluation study in the radius of 10km villages of the plant
on the exposure of VCM, by engaging reputed institution and furnish the report to the Board while seeking Consent
to Operate"
மேலும் - CTO கோரி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது, முந்தைய திட்டங்களுக்கு அனுமதி
வழங்கப்பட்டப்போது, அப்போது வழங்கப்பட்ட நிபந்தனைகளை அமல்படுத்தியதற்கான அறிக்கையை ஐ.ஐ.டி.
சென்னை அமைப்பின் உதவியுடன் தயாரித்து சமர்ப்பிக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
"The unit shall carryout a study engaging IIT, Chennai on the compliance of EC and the
Consent Orders issued along with process audit, safety audit and environmental audit, and furnish the report while
seeking consent to operate."
மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரியுள்ள ஆய்வுகள் இரண்டையும், DCW தொழிற்சாலையின் ஏற்பாட்டிலேயே
செய்திட அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் - அனைத்து வகையான மாசுக்களால் ஏற்பட்டுள்ள
உடல் நலன் பாதிப்புகளை ஆய்வு செய்ய கோராமல், VCM மூலம் மட்டும் ஏற்படும் தாக்கத்தை ஆய்வு செய்ய
வாரியம் கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
DCW தொழிற்சாலையின் விரிவாக்கதிட்டத்தின் ஒரு
பகுதியான PVC உற்பத்தி பெருக்கம் / CPVC புதிதாக தயாரிப்பு ஆகிய திட்டங்களுக்கு - தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய CTE - முழு
விபரம்
|