தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளின் அனைத்து இடங்களுக்கும் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் பெருவாரியான இடங்களுக்கும் ஒற்றை சாளர முறையில் (SINGLE WINDOW COUNSELLING) மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்றுவருகிறது.
அண்ணா பல்கலைகழகத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் இந்த சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் மே 3 முதல் வழங்கப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்கள் மே 20 வரை வழங்கப்படும் என்றும், அன்றே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி தினம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது - விண்ணப்பங்கள் விநியோகிக்க இறுதி தினம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு, விண்ணப்பங்கள் மே 27 வரை விநியோகிக்கப்படும் என்றும், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அந்த தினமே (மே 27) இறுதி தினம் என்றும் தெரிவிக்கிறது.
மே 19 வரை - 2,05,940 விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
1. 1.8 கோடி: வேலையில்லா பொறியாளர்களின் எண்ணிக்கை posted byM.M. Seyed Ibrahim (Chennai)[20 May 2014] IP: 122.*.*.* India | Comment Reference Number: 35031
"தமிழ்நாட்டில் மட்டும் 498 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இவற்றில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 2,36,417 பேர் படித்து வெளியில் வருகின்றனர். மொத்த இந்தியாவையும் கணக்கிட்டால், நாடு முழுவதும் உள்ள 4,469 பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு 16,03,012 பேர் படித்து வெளியில் வருகின்றனர். இது, 2011-12ம் ஆண்டின் கணக்கு. இதற்கு முந்தைய ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை சற்றுக் குறைவாக இருக்கலாம். எப்படி இருப்பினும், ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட புதிய பொறியாளர்கள் உருவாகிக்கொண்டே வருகின் றனர்"
"எனவேதான் ஜனவரி - 2011 நிலவரப்படி 98 லட்சமாக இருந்த இந்திய வேலையில்லா பொறியாளர்களின் எண்ணிக்கை, 2013-ல் 1.8 கோடியாக அதிகரித்துள்ளது."
"ஐ.டி. நிறுவனங்களின் கூட்டமைப்பான 'நாஸ்காம்’ வெளியிட்ட தகவலின்படி, 2013-ம் ஆண்டில் 50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகளைப் பெற, சுமார் 10 லட்சம் பொறியாளர்கள் போட்டியிட்டனர்."
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross