காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் 87ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள், 27.04.2014 ஞாயிற்றுக்கிழமை 19.00 மணிக்கு திக்ர் மஜ்லிஸுடன் துவங்கியது.
ரஜப் மாதம் முழுவதும் ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஸஹீஹுல் புகாரீ கிரந்தத்திலிருந்து நபிமொழிகள் ஓதப்பட்டு, காலை 09.15 மணியளவில் அன்றைய நாளில் ஓதப்பட்ட நபிமொழிகளுக்கு மார்க்க அறிஞர்களால் விளக்கவுரை வழங்கப்படுவது வழமை.
ரஜப் 20ஆம் நாளன்று (மே 20) ஓதப்பட்ட நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, ஐக்கிய சமாதானப் பேரவையின் தலைவர் மவ்லவீ என்.ஹாமித் பக்ரீ மன்பஈ வழங்கினார்.
இறையச்சம், திருமறை குர்ஆனுக்கு விளக்கமாகப் பதிவுசெய்யப்பட்ட நபிமொழிகள் ஆகிய அம்சங்களை உள்ளடக்கி அந்த உரை அமைந்திருந்தது.
ரஜப் 21ஆம் நாளன்று (மே 21) ஓதப்படும் நபிமொழிகளுக்கான விளக்கவுரையை, காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் கே.எம்.காஜா முஹ்யித்தீன் பாக்கவீ வழங்குகிறார்.
ஒவ்வொரு நாளும் நடைபெறும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள், http://www.bukhari-shareef.com/eng/live/ என்ற வலைதள பக்கத்தில் ஒலி நேரலை செய்யப்படுகிறது.
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1435ஆம் ஆண்டு நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் 1434ஆம் ஆண்டு (கடந்தாண்டு) 20ஆம் நாள் நிகழ்ச்சிகள் தொடர்பான செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|