மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து சுற்றுப்போட்டியின் - நேற்று நடைபெற்ற இரண்டாவது சுற்றுப்போட்டியில், திருவனந்தபுரம் – ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் அணி வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்துள்ளது. விரிவான விபரம் வருமாறு:-
காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் சார்பில், மவ்லானா அபுல்கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான - அகில இந்திய அளவிலான கால்பந்து சுற்றுப்போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 49ஆம் ஆண்டு சுற்றுப்போட்டிகள் மே 08ஆம் நாளன்று துவங்கியது.
நேற்று இரண்டாவது சுற்றுப்போட்டி 16.40 மணிக்குத் துவங்கியது. இதில், இம்மாதம் 19ஆம் நாளன்று நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற கோவை மாவட்ட கால்பந்துக் கழக அணியும், திருவனந்தபுரம் ஸ்டேட் பாங்க் ஆஃப் திருவாங்கூர் அணியும் மோதின.
ஆட்டம் மந்தமாகவே துவங்கி, சென்று கொண்டிருந்தது. 14ஆவது நிமிடத்தில், திருவனந்தபுரம் அணி வீரர் அன்ஸாரீ ஒரு கோல் அடிக்க, மந்தம் மறைந்து சிறிது வேகம் கண்டது போட்டி. கோவை அணியினர் கோல் அடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டும் பலன் கிட்டவில்லை.
இந்நிலையில், ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் - போட்டி நிறைவடைய சில நிமிடங்களிருக்க - 80ஆவது நிமிடத்தில், திருவனந்தபுரம் அணி வீரர் அஃப்ஸல் ஒரு கோல் அடிக்கவே, 2-0 என்ற கோல் கணக்கில் அவ்வணி வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தது.
நேற்றைய போட்டியைக் காண, நகரின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த கால்பந்து ரசிகர்கள் திரளாக வந்திருந்தனர்.
இன்று (மே 21) நடைபெறும் போட்டியில், திருச்சி ப்ரெஸிடென்ட் லெவன் அணியும், திருவனந்தபுரம் எஸ்.எம்.ஆர்.சி. அணியும் மோதுகின்றன.
போட்டி நிரல் வருமாறு:-
மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்துப் போட்டி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (2013) மவ்லானா அபுல் கலாம் ஆஸாத் நினைவு சுழற்கோப்பைக்கான அகில இந்திய கால்பந்து 13ஆம் நாள் போட்டி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |