இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு, இம்மாதம் 28ஆம் நாளன்று தூத்துக்குடியில் கூடுகிறது. இதுகுறித்து, அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ் வெளியிட்டுள்ள அறிக்கை:-
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயற்குழுக் கூட்டம் இம்மாதம் 28ஆம் நாள் புதன்கிழமை மாலை 05.00 மணிக்கு, தூத்துக்குடி மாவட்ட தலைவர் ஹாஜி பி.மீராசா மரைக்காயர் அவாகள் தலைமையில், மாநில பொதுச் செயலாளர் ஹாஜி கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அவர்கள் முன்னிலையில், தூத்துக்குடி ஜெய்லானி தெருவிலுள்ள மாவட்ட தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தல், எதிர்வரும் ரமழான் மாதத்தையொட்டிய சேவைத் திட்டங்கள், இயக்கப் பணிகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதித்து முடிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மாவட்ட நிர்வாகிகள், நகர தலைவர் - செயலாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் தவறாமல் பங்கேற்க வருமாறு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஜெ.மஹ்மூதுல் ஹஸன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |