காயல்பட்டினம் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை, வரும் ஜூன் மாதம் 03ஆம் நாளன்று - 25 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விமரிசையாகக் கொண்டாட, அதன் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, புதிய நிர்வாகிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விபர அறிக்கை வருமாறு:-
சமூகத் தீமைகளைக் களைவதற்குப் பாடுபடல், பொதுநலப் பணிகளை வலிமையுடன் செய்தல் உள்ளிட்ட முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி வளாகத்தில் “காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு” என்ற பெயரில் புதியதோர் அமைப்பு 1989ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது.
நகர ஒற்றுமை, நகர மக்கள் நலன், கலாச்சாரப் பாதுகாப்பு, ஒழுக்கக் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் நோக்குடன், துவங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை பல்வேறு சோதனைகளுக்கிடையிலும் இறையருளால் எமதமைப்பு நிறைவான சேவைகளைச் செய்து வருகிறது.
அமைப்பு துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, வெள்ளி விழாவை நடத்துவது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுப்பதற்காக, கலந்தாலோசனைக் கூட்டம், இம்மாதம் 20ஆம் நாள் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.30 மணியளவில், தலைவர் ஹாஜி கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை தலைமையில் அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது. எம்.ஏ.உமர் கத்தாப் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
அமைப்பின் நிறுவன உறுப்பினர்களான கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர். எம்.எல்.ஷேக்னா லெப்பை ஆகியோர் கருத்துரையாற்றினர்.
நீண்ட கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - சேவையாற்றிய நிர்வாகிகளுக்கு நன்றி:
இதுகாலம் வரை அமைப்பின் நிர்வாகிகளாகவும், ஆலோசகர்களாகவும், அங்கத்தினராகவும் இருந்து சேவையாற்றிய அனைவருக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து மகிழ்வதுடன், அவர்களது சேவைகள் அனைத்தையும் எல்லாம்வல்ல அல்லாஹ் தனது அளப்பெரிய கருணையால் ஏற்று நற்கூலி நல்கிடவும் பிரார்த்திக்கிறது.
தீர்மானம் 2 - புதிய நிர்வாகிகள் தேர்வு:
இதுவரை சேவையாற்றிய நிர்வாகிகளின் பொறுப்புக்காலம் நிறைவடைந்துள்ளதையடுத்து, பின்வருமாறு புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்:-
கவுரவ ஆலோசனைக் குழு:
ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை (தலைவர்)
ஹாஜி வி.எஸ்.எஸ்.முஹ்யித்தீன் தம்பி
ஹாஜி என்.எம்.எம்.மஹ்மூத்
டாக்டர் பி.எம்.ஏ.ஜாஃபர் ஸாதிக்
ஹாஜி கே.எஸ்.அப்துல் காதிர்
ஹாஜி குளவி சேக் அப்துல் காதிர்
ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர்
ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன்
ஹாஜி எம்.கே.முஹம்மத் அலீ (எ) ஹாஜி காக்கா
ஹாஜி எஸ்.ஏ.ஜவாஹிர்
காயல் எஸ்.இ.அமானுல்லாஹ்
தலைவர்:
ஹாஜி கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை
துணைத்தலைவர்:
கே.ஜெ.ஷாஹுல் ஹமீத்
செயலாளர்:
இசட்.முத்து இப்றாஹீம்
பொருளாளர்:
எம்.ஏ.எஸ்.அப்துல் ரஷீத்
இணைச் செயலாளர்கள்:
(1) என்.எம்.ஏ.அப்துர்ரஹ்மான்
(2) என்.எம்.கிழுறு முஹம்மத்
செயற்குழு உறுப்பினர்கள்:
(1) எம்.எல்.முஹம்மத் முஹ்யித்தீன்
(2) எஸ்.எம்.பி.ஷேக் அப்துல் காதிர் இர்ஃபான்
(3) கே.எஸ்.எல்.மஹ்மூத் ரஜீன்
(4) எம்.ஏ.உமர் கத்தாப்
(5) கே.எம்.டி.அபூபக்கர் ஸித்தீக்
தீர்மானம் 3 - நலத்திட்ட உதவிகளுடன் வெள்ளி விழா கொண்டாட்டம்:
அமைப்பு துவங்கப்பட்டு இறையருளால் 25 ஆண்டுகள் பூர்த்தியடைவதையொட்டி, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் ஜூன் மாதம் 03ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று, அமைப்பின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை விமரிசையாக நடத்திடவும், அதன்போது ஏழை-எளியோர் 25 பேருக்கு பயனுள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிடவும், அமைப்பின் பெயர்க்காரணரான மஹான் காயிதேமில்லத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மீது கத்முல் குர்ஆன் ஓதி ஈஸால் தவாப் செய்திடவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
வெள்ளி விழா ஏற்பாடுகள், நிகழ்முறைகள் உள்ளிட்ட அனைத்தையும் வடிவமைத்திட அமைப்பின் நிர்வாகக் குழுவிற்கு இக்கூட்டம் அதிகாரம் அளிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
நன்றியுரையைத் தொடர்ந்து, எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ துஆவுடன் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்து லில்லாஹ்!
வெள்ளி விழா தொடர்பான விபரங்களுக்கும், ஒத்துழைப்புகளுக்கும், அமைப்பின் தலைவர் ஹாஜி கே.எம்.என்.மஹ்மூத் லெப்பை அவர்களை, +91 98425 12188 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு, காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.A.இப்றாஹீம் மக்கீ
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |