இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடப்பு ஏப்ரல் மாதம் 07ஆம் நாளன்று துவங்கி, மே 12ஆம் நாள் வரை ஒன்பது கட்டங்களாக நடைபெற்று, மே 16ஆம் நாளன்று முடிவுகளும் வெளியானது. இம்முடிவுகளின்படி, பாரதீய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியமைக்கவுள்ளது.
இத்தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அதன் காரணமாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர் வாராந்திர கூட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது, தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எனவே மே 26 திங்கட்கிழமை முதல் மக்கள் குறைதீர் வாராந்திர கூட்டம், வாரந்தோறும் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறுமென்றும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம.ரவிக்குமார் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |