‘ஜன்சேவா கூட்டுறவு
கடன் வழங்கும் சங்கம்’ என்ற பெயரிலான - வட்டியில்லா கடன் வழங்கும் சங்கம் குறித்து பொதுமக்களுக்கு விளக்குவதற்காக,
கலந்துரையாடல் நிகழ்ச்சி - நாளை (25.10.2014 சனிக்கிழமை) மஃரிப் தொழுகைக்குப் பின், ஹாங்காங் கவ்லூன் பள்ளி சமுதாயக் கூடத்தில்
நடைபெறவுள்ளது.
இந்தியாவிலிருந்து இதற்கென வருகை தந்துள்ள - ஜன்சேவா காயல்பட்டினம் கிளை தலைவர் ஹாஜி வாவு
எஸ்.காதிர் ஸாஹிப், அதன் சென்னை கிளை செயலாளர் எஸ்.இம்தியாஸ் அஹ்மத், நிர்வாகிகளான எஸ்.இப்னு ஸஊத்,
எல்.கே.கே.லெப்பைத்தம்பி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ‘ஜன்சேவா’வின் செயல்திட்டங்கள் குறித்து விளக்கவும், கேள்வி-பதில்
நிகழ்ச்சியின்போது பங்கேற்போர் கேட்கும் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கவும் உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள - காயல்பட்டினம், கீழக்கரை, நீடூர், தஞ்சாவூர் உட்பட தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த ஹாங்காங் வாழ் பொதுமக்கள்
அனைவரும் வருகை தருமாறு, ஜன்சேவா நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தகவல்:
ஹாபிழ் எம்.எம்.முஜாஹித் அலி
ஜன்சேவா குறித்த முந்தைய செய்தி காண இங்கு அழுத்தவும்
[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 22:20 / 24.10.2014] |