முஹர்ரம் (1436) மாத அமாவாசை அக்டோபர் 23 வியாழக்கிழமை அன்று - இங்கிலாந்து நேரப்படி இரவு 9:56 மணி அளவில் ஏற்படுகிறது.
அப்போது இந்திய நேரம் அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை அதிகாலை 3:26.
அக்டோபர் 23 அன்று உலகில் எங்கும் பிறையை காண இயலாது.
அக்டோபர் 24 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 5:58 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:24. பிறையின் வயது 15 மணி
நேரம். சூரியன் மறைந்து 26 நிமிடங்கள் கழித்து சந்திரன் மறைந்தாலும் காயல்பட்டினத்தில் பிறையை வெறுங்கண்கள் கொண்டு காண இயலாது.
தொலைநோக்கிகள் உதவிக்கொண்டு காணலாம்.
அக்டோபர் 24 அன்று பசிபிக் கடல் பகுதியிலும், தென் அமெரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியிலும் வெறுங்கண்கள் கொண்டும், தென் அமெரிக்க
கண்டத்தின் ஏனைய பகுதிகளிலும், மத்திய அமெரிக்க கண்டம், அமெரிக்காவின் தென் பகுதி, மெக்சிகோ ஆகிய பகுதிகளில் வானிலை சூழல்
தெளிவாக இருந்தால் வெறுங்கண்கள் கொண்டும், ஆப்ரிக்கா கண்டம், தென் ஐரோப்பா, அரேபியா தீபகற்பம், தென் இந்தியா, இலங்கை, தென்
கிழக்கு ஆசியா பகுதிகளில் தொலைநோக்கிகள் உதவிக்கொண்டும் பிறையை காணலாம்.
அக்டோபர் 25 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 5:57 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 7:12. சூரியன் மறையும்போது
சந்திரனின் வயது 39 மணி நேரம். வெறுங்கண்கள் கொண்டு காயல்பட்டினத்தில் அன்று பிறையை எளிதாக காணலாம்.
மேலும் அக்டோபர் 25 உலகின் அனைத்து பகுதிகளிலும் பிறையை வெறுங்கண்கள் கொண்டு காணலாம்.
பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ளவர்களில் - கேரளாவை தலைமையகமாக கொண்டு செயல்புரியும் ஹிஜ்ரி குழுவினை
பின்பற்றுவோருக்கு அக்டோபர் 24 - முஹர்ரம் 1 ஆகும்.
மாதப்பிறப்பினை கணக்கிட வேறு வழி முறைகளை பயன்படுத்தும் Fiqh Council of North America/Islamic Society of North America
அமைப்புக்கும் அக்டோபர் 25 - முஹர்ரம் 1 ஆகும்.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு அக்டோபர் 23 (அமாவாசை) அன்று
துல்ஹஜ் 29 பூர்த்தி ஆகிறது. அக்டோபர் 23 அன்று உலகில் எங்கும் பிறை தென்பட வாய்ப்பில்லை. எனவே அவர்கள் அக்டோபர் 24 அன்று
துல்ஹஜ் 30 பூர்த்திசெய்து, அக்டோபர் 25 அன்று முஹர்ரம் மாதம் துவக்குவர்.
அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு அக்டோபர் 23 (அமாவாசை) அன்று துல்ஹஜ் 27 பூர்த்தி
ஆகிறது. எனவே அவர்கள் அக்டோபர் 25 அன்று துல்ஹஜ் 29 பூர்த்தி செய்வர். அன்று வெறுங்கண்கள் கொண்டு காயல்பட்டினத்தில் பிறையை
எளிதாக காணலாம். அவ்வாறு பிறையை கண்டால் - அவர்கள், அக்டோபர் 26 அன்று முஹர்ரம் மாதம் துவக்குவர்.
வானிலை சூழல் காரணமாக - அக்டோபர் 25 அன்று பிறை தென்படவில்லை என்றால், அவர்கள் அக்டோபர் 26 அன்று துல்ஹஜ் 30 பூர்த்தி செய்து,
அக்டோபர் 27 அன்று முஹர்ரம் 1 துவக்குவர்.
|