அக்டோபர் 17 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை கூட்டம் குறித்து அவ்வமைப்பு சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
17-10-2014 சனி கிழமை இரவு 7.00 மணியளவில் காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளையின் சார்பில் பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்ற உதவி வழங்கும் கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டு உதவி கேட்டு வந்துள்ள மனுக்களை பரிசீலித்து, அவர்களை நேரில் அழைத்து விசாரித்து அவர்களில் தகுதியான நபர்களை தெரிவு செய்தனர்.
அதன்படி -
கடனுதவியாக 4 நபர்களுக்கும்
ஜகாத் உதவியாக 1 நபர்களுக்கும்
வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் நிர்வாகிகள் வாவு கே.எஸ்.முஹம்மது நாஸர், டூட்டி எம்.எஸ்.எல்.சுஹரவர்த்தி, பாளையம் ஹபிப் முஹம்மது,
எம.ஏ.சி.செய்யது அபுதாகிர், செ.மு.அகமது சுலைமான் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் பைத்துல்மால் அறக்கட்டளை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
|