காயல்பட்டினத்தில், இம்மாதம் 06ஆம் நாள் திங்கட்கிழமையன்று ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. குருவித்துறைப் பள்ளியில் பெருநாளன்று காலை 09.45 மணியளவில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.ரஹ்மத்துல்லாஹ் ஃபாஸீ தொழுகையை வழிநடத்தி, குத்பா பேருரையாற்றினார்.
கலந்துகொண்டோர்:
இத்தொழுகையில், பள்ளியின் தலைவர் நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், அப்போதைய நிர்வாகிகளான எஸ்.எம்.கபீர், ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல், அதன் நடப்பு துணைத்தலைவர் என்.எஸ்.நூஹ் ஹமீத், இணைச் செயலாளர்களான கானாப்பா எஸ்.ஏ.செய்யித் முஹம்மத் ஸாலிஹ், கே.எஸ்.முஹம்மத் நூஹ், கே.எம்.செய்யித் அஹ்மத், பள்ளி இமாம் மவ்லவீ ஹாஃபிழ் எம்.எல்.முஹம்மத் அலீ, முஅத்தின் சதக் இப்றாஹீம்,
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செயலாளர் பிரபு சுல்தான், அதன் ஒருங்கிணைப்பாளர் சொளுக்கு எஸ்.எஸ்.எம்.முஹம்மத் இஸ்மாஈல் என்ற முத்து ஹாஜி, காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், தேமுதிக மற்றும் காக்கும் கரங்கள் நற்பணி மன்ற தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன், கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியின் செயலாளர் ‘முத்துச்சுடர்’என்.டீ.இஸ்ஹாக் லெப்பை,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், நகர என்.டி.பாதுல் அஸ்ஹப் ஜுமானீ, எஸ்.இ.முஹம்மத் அலீ ஸாஹிப் (டீ.எம்.), எஸ்.எச்.முஹம்மத் நூஹ், ரியாத் காயல் நல மன்ற செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் பீ.எஸ்.ஜெ.ஜெய்னுல் ஆப்தீன், ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் நிர்வாகி கண்டி ஸிராஜ், பெங்களூரு காயல் நல மன்ற துணைச் செயலாளர் ஹாஃபிழ் மன்னர் செய்யித் அப்துர்ரஹ்மான்,
மார்க்க அறிஞர்களான மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, ‘முத்துச்சுடர்’ மாத இதழ் ஆசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் என்.டீ.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் நுஸ்கீ மஹ்ழரீ, மவ்லவீ ஹாஃபிழ் எம்.எம்.சுலைமான் லெப்பை மஹ்ழரீ, மவ்லவீ ஹாஃபிழ் கே.ஏ.தாஜுத்தீன் மஸ்லஹீ, உட்பட அப்பள்ளி மஹல்லா ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். சிற்சிறு குழந்தைகளுக்கும் பலவண்ணப் புத்தாடைகளை அணிவித்து பொதுமக்கள் தொழுகைக்கு அழைத்து வந்திருந்தது அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது.
மக்கள் திரள்:
இவ்வாண்டு பெருநாளைக் கொண்டாடுவதற்காக, வெளியூர் - வெளிநாடுகளில் வசிக்கும் காயல்பட்டினத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் ஊர் வந்திருந்தமையால், பள்ளிவாசல்களில் மக்கள் கூட்டம் மிக அதிகமாகக் காணப்பட்டது. எனினும், நோன்புப் பெருநாளுடன் ஒப்பிடுகையில் சற்று குறைவான கூட்டமே காணப்பட்டது.
வாழ்த்துக்கள் பரிமாற்றம்:
தொழுகை நிறைவுற்ற பின்னர், பொதுமக்கள் தமது நண்பர்களையும், உறவினர்களையும் சந்தித்து, பெருநாள் வாழ்த்துக்களைக் கூறி, கட்டித் தழுவி, கைலாகு செய்து மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
பெருநாள் தொழுகையையொட்டி, பள்ளி நலனுக்காக நன்கொடை வசூலிக்கப்பட்டது. மொத்தம் 18 ஆயிரத்து 800 ரூபாய் சேகரமானது.
ஜியாரத் நிகழ்ச்சி:
பள்ளியில் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவுற்ற பின்னர், தொழுகையை வழிநடத்திய இமாம், குத்பா பேருரையாற்றிய கத்தீப் ஆகியோர் டங்கா (முரசு) முழங்க, பைத் பாடி அழைத்துச் செல்லப்பட்டனர். மஹான் ஈக்கியப்பா தைக்கா, மஹான் பெரிய முத்துவாப்பா தைக்கா ஆகிய இடங்களில் ஜியாரத்தை முடித்துவிட்டு, அனைவரும் களைந்து சென்றனர்.
குருவித்துறைப் பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடைபெற்ற ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாள் தொழுகை குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
குருவித்துறைப் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |