வட அமெரிக்காவின் அநேக பகுதிகளிலும், அட்லாண்டிக் - பசிபிக் கடல் பகுதிகளிலும், ஆசிய கண்டத்தின் கிழக்கு கோடியிலும் அக்டோபர் 23 அன்று பகுதி சூரிய கிரகணம் (PARTIAL SOLAR ECLIPSE) ஏற்படுகிறது.
இவ்வாண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் இதுவாகும். மேலும் இவ்வாண்டின் நான்காவது (சந்திர கிரகணம் உட்பட) மற்றும் இறுதி கிரகணமும் ஆகும். இக்கிரகணத்தை இந்தியாவில் காண இயலாது.
கிழக்கு சைபீரியா பகுதியில் கம்சட்கா தீபகற்பத்தில் 19:38 UTC/GMT (இந்திய நேரம் அக்டோபர் 24 நள்ளிரவு 12:08) மணிக்கு துவங்கும் இக்கிரகணம்
- வட அமெரிக்காவின் அநேக பகுதிகளில் பகுதி கிரகணமாக தென்படும்.
மேலும் - இந்த கிரகணம், 21:45 UTC/GMT (இந்திய நேரம் அக்டோபர் 24 நள்ளிரவு 3:15) மணிக்கு உச்சகட்டத்தை - கனடா நாட்டின், PRINCE OF
WALES தீவுக்கு அருகே, நுனவுட் பகுதியில் - அடையும்.
23:52 UTC/GMT (இந்திய நேரம் அக்டோபர் 24 அதிகாலை 5:28) மணிக்கு பகுதி கிரகணம் நிறைவு பெறும்.
அமெரிக்க நகரங்களில் கிரகணம் தென்படும் நேரங்கள்
கனடா | மெக்சிகோ நகரங்களில் கிரகணம் தென்படும் நேரங்கள்
|