ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை, வரும் நவம்பர் 14ஆம் நாளன்று நடத்திட, அதன் செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அமீரகங்களில் உள்ள காயலர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் டீ.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன் வெளியிட்டுள்ள அறிக்கை:-
துபை காயல் நல மன்றத்தின் அக்டோபர் 2014 மாத செயற்குழுக் கூட்டம் மன்றத் தலைவர் ஆடிட்டர் புஹாரீ அவர்களது வில்லாவில், இம்மாதம் 10ஆம் நாள் வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்குப் பின் நடைபெற்றது.
துபை காயல் நல மன்றத்தின் 2014ஆம் ஆண்டின் பொதுக்குழுக் கூட்டத்தை, இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று 10.00 மணி முதல் 18.00 மணி வரை துபை சத்வாவில் அமைந்துள்ள அல்-ஸஃபா பூங்காவில் நடத்திட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமீரகத்தில் வாழும் அனைத்து காயலர்களும் இச்செய்தியையே அழைப்பிதழாக ஏற்றுக்கொண்டு, உங்களின் குடும்ப சகிதம் கூட்ட நிகழ்விடத்திற்கு முற்கூட்டியே வருகை தந்து சிறப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
உறுப்பினர்கள் பொதுக்குழுவிற்கு முற்கூட்டியே வரச் செய்வதற்காகவும், அனைத்து நிகழ்ச்சிகளிலும் இறுதி வரை இருந்து செல்ல ஊக்கப்படுத்துவதற்காகவும், குலுக்கல் முறையில் பரிசுக்குரியோர் தேர்வு செய்யப்பட்டு, மதிப்புமிக்க பரிசுகளும் இக்கூட்டத்தில் வழங்கப்படவுள்ளன.
இது சம்பந்தமான விரிவான செய்தி மீண்டும் இதே இணையதளத்தில் வெளியிடப்படும் என்பதை அன்புடன் அறியத் தருகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபை காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
துபை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |