தமிழகத்தில் இருந்து இவ்வாண்டு இந்திய ஹஜ் குழு மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்டோர் நாடு திரும்பி வருகின்றனர்.
அக்டோபர் 21 (நேற்று) - ஹஜ் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பிய ஹஜ் பயணியரை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தலைவர் அ. முஹம்மது ஜான், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் தமிழ்மகன் உசேன், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் அரசு முதன்மைச் செயலர் முனைவர் க.அருள்மொழி IAS, ஹஜ் குழுவின் செயலர் மற்றும் செயல் அலுவலர் முஹம்மது நசீமுதீன் IAS ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்றனர். |