இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா சார்பில், இலங்கையில் பதவி உயர்வுபெற்ற நீதிபதிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவிக்கு உதவித்தொகையும் வழங்கப்பட்டுள்ளது. விபரம் வருமாறு:-
இலங்கையின் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக அல்ஹாஜ் எம்.எம்.அப்துல் கஃபூர், இம்மாதம் 09ஆம் நாளன்று பதவி உயர்வு பெற்றார். அதற்கான நியமன ஆணையை, இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ அவருக்கு வழங்கினார்.
இதற்காக, இலங்கை ஃபெடரேஷன் ஆஃப் காதிரிய்யத்துன் நபவிய்யாஹ், நபவிய்யாஹ் இஸ்லாமிய இளைஞர் நிறுவனம் ஆகியவற்றின் சார்பில் இம்மாதம் 18ஆம் நாளன்று அவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்காவின் சார்பில் - அதன் செயலாளர் பி.எம்.ரஃபீக் அவருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார்.
இலங்கை வானொலியின் முன்னாள் பணிப்பாளர் எம்.இசட்.அஹ்மத் முனவ்வர், வானொலி அறிவிப்பாளரும் - நிகழ்ச்சிகள் தொகுப்பாளருமான ஏ.ஆர்.எம்.ஜிஃப்ரீ, ‘நவமணி’ என்.எம்.அமீன், காவாலங்கா உறுப்பினர் ஜவஹர் இஸ்மாஈல் உள்ளிட்டோரும் இதன்போது உடனிருந்தனர்.
மற்றொரு நிகழ்ச்சியில், இலங்கை மல்வானை மருத்துவக் கல்லூரி மாணவி சுமய்யாவுக்கு, இலங்கை காயல் நல மன்றம் சார்பில் கல்வி உதவித்தொகையை அதன் செயலாளர் வழங்கினார்.
காவாலங்கா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |