தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. காயல்பட்டினம் சுற்றுவட்டாரத்தில் நேற்று (அக்டோபர் 23 வியாழக்கிழமையன்று) 20.30 மணியளவில் தூறலுடன் துவங்கி, 21.00 மணியளவில் இதமழை பெய்யத் துவங்கியது.
இன்று நள்ளிரவில் சிற்சிறு இடைவெளிகளுக்கிடையே இதமழையும், சிறுமழையுமாகப் பெய்தவண்ணம் இருந்தது.
நேற்று 20.00 மணியளவில் காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனைக்கு முன்பு வரை மழை பெய்தது. அங்கிருந்து துவங்கி காயல்பட்டினம் மேற்கு எல்லை வரை மழை பெய்யவில்லை. அடுத்துள்ள பேயன்விளையில் மழை பெய்தது. காயல்பட்டினத்தை மட்டும் விட்டுவிட்டு, இரு எல்லைகளிலும் மழை பெய்தது பார்க்க வேடிக்கையாக இருந்தது.
இன்று நண்பகல் 11.00 மணி நிலவரப் படி நகரில் வெயில் வீசுகிறது. இதமான வானிலை நிலவுகிறது.
இம்மாதம் 20ஆம் நாளன்று இரவு துவங்கி, மறுநாள் (அக்டோபர் 21) நண்பகல் 11.30 வரை காயல்பட்டினத்தில் பெய்த கனமழை காரணமாக, நகரில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. குருவித்துறைப் பள்ளி மையவாடியில் இரண்டு மரங்கள் வேரோடு சாய்ந்திருக்கும் காட்சிகள்:-
காயல்பட்டினத்தில் மழை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
குருவித்துறைப் பள்ளி தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |