தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 3ல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையிலான புதிய சட்ட முன்வடிவை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார்.
உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 33ல் இருந்து 50% ஆக உயர்த்தப்பட்டிருந்தது.
எனினும், வரும் அக்டோபர் 24ம் தேதிக்குள் இந்த நடைமுறையை அமல்படுத்த முடியாது என்பதால், பெண்களுக்கு 3ல் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான சட்ட முன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கையை 50 சதவீதமாக அதிகரிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கிராம ஊராட்சிகளிலும், ஊராட்சி ஒன்றிய மன்றங்களிலும் மாவட்ட ஊராட்சிகளிலும் உள்ள இடங்களின்-பதவிகளின் மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கை பெண்களுக்கு ஒதுக்க வகை செய்கிறது. பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்பெறுவதை மேம்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சியில் பெண்கள் பங்கு பெறுவதை எளிதாக்கும் வகையில் பெண்களுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டது.
1. பாராட்டுக்கள் . posted byM.Z.SIDDIQ. (KAYALPATNAM.)[22 June 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44102
அன்பின் அட்மின் அவர்களுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும்.
இந்த வகையான அரசு செய்திகளை உடனுக்குடன் வெளிஇடும் காயல்பட்டினம். காம் க்கு பாராட்டுக்கள். அல்லாஹ் அதன் சேவை நல்ல அமைய கிருபை செய்வனாகவும் ஆமீன்.
முக்கியம் நம் ஒட்டு மொத்த சமுதாய சம்பந்தமான பிரச்சனைகளை சட்ட சபையிலே பேசிவரும் [அதாவது சிறைவாசிகள் விடுதலை,பாங்கு ஒலிப்பது,இட ஒதுக்கிடு சம்பந்தமான]இந்த மண்ணின் மைந்தன்,சமுதாய குரல் அபூபக்கர் காக்கா MLA உடைய சட்டசபை பேச்சின் மூலம் வலியுறுத்திய செய்தியும் போட்டு வந்தால் நன்றாக இருக்கும் என விரும்புகிறோம்.
2. பாராட்டுக்கள் . posted byM.Z.SIDDIQ. (KAYALPATNAM.)[22 June 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44103
அன்பின் அட்மின் அவர்களுக்கு அஸ்ஸலாமுஅலைக்கும். இந்த வகையான அரசு செய்திகளை உடனுக்குடன் வெளிஇடும் காயல்பட்டினம். காம் க்கு பாராட்டுக்கள். அல்லாஹ் அதன் சேவை நல்ல அமைய கிருபை செய்வனாகவும் ஆமீன்.
முக்கியம் நம் ஒட்டு மொத்த சமுதாய சம்பந்தமான பிரச்சனைகளை சட்ட சபையிலே பேசிவரும் [அதாவது சிறைவாசிகள் விடுதலை,பாங்கு ஒலிப்பது,இட ஒதுக்கிடு சம்பந்தமான]இந்த மண்ணின் மைந்தன்,சமுதாய குரல் அபூபக்கர் காக்கா MLA உடைய சட்டசபை பேச்சின் மூலம் வலியுறுத்திய செய்தியும் போட்டு வந்தால் நன்றாக இருக்கும் என விரும்புகிறோம்.
3. Re:... posted byP.S.J.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM)[22 June 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44106
இந்த முறையும் நமது நகராட்சிக்கு 6 பெண் உறுப்பினர்தான். 12 உறுப்பினர் ஆண்கள். ஆனால் வார்டுகள் மாறலாம் . கடந்த 2 முறை பெண் உறுப்பினர்கள் வகுத்து வந்த வார்டுகள் இந்த முறை ஆண்களுக்கு ஒதுக்க படலாம். ஆனால் தலைவர் பெண்தான் இதில் எந்த சந்தேகம் இல்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross