சட்டசபையில் மாநகராட்சி சட்ட திருத்த முன்வடிவினை உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்தார். இந்த சட்டத்தில், மாநகராட்சி மேயரை கவுன்சிலர்கள் மட்டுமே, தேர்வு செய்யும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்ட முன் வரைவுக்கு தி.மு.க., ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக அக்கட்சியின் மா. சுப்பிரமணியம் கூறினார். இந்த சட்ட திருத்தம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.
1. Re:...சர்வமும் அம்மா மையம்....நல்ல ஆரம்பம்.. posted bymackie noohuthambi (kayalpatnam )[22 June 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44104
இதே போல் ஊராட்சி மன்றங்களில் நகர்மன்ற தலைவரை மக்கள் நேரடியாக தேர்ந்து எடுப்பதையும் ரத்து செய்தால் நல்லது.ஆளும் கட்சியே எல்லா இடங்களிலும் அரசாட்சி செய்யலாம்.எதிர்க்க கட்சி என்று ஒன்று இல்லாமல் போய் விடும். வானளாவிய அதிகாரம் மிக்க முதல்வர் சபாநாயகர். இனி எல்லாமே அம்மா மையமே.
சர்வாதிகாரத்தை நோக்கி வேகமாக செல்லாதீர்கள். இந்த நிலையும் மாறும். அருகில் உள்ள இலங்கையை மனதில் நினைத்து பாருங்கள்.அண்ணாவையும் எம்ஜியாரையும் கொஞ்சம் நினைத்து பாருங்கள். இந்திரா காந்தியின் சர்வாதிகார ஆட்சியின் வீழ்ச்சியையும் நினைத்துப் பாருங்கள்.
எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை.அவன் எப்படி வாழ்ந்தான் என்பதை நினைத்தால் வாழ்க்கையில் தோல்வி இல்லை...உங்கள் அரசியல் ஆசான் பாடியது நினைவுக்கு வரவில்லையா....
2. Re:... posted byP.S.J.SHAIK ABDUL KADER (KAYAL PATNAM)[22 June 2016] IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 44105
மாண்புமிகு அம்மா அவர்களின் தொலைநோக்கு பார்வை இது.
கழக அடிமட்ட தொண்டனை புறக்கணித்து மாண்புமிகு அம்மா அவர்களின் தீவிர விசுவாச வேட்பாளர்களை தோற்கடித்த துரோகிகளுக்கு எதிரான சாட்டை.
கண்டிப்பாக உள்ளாட்சியிலும் நல்லாட்சி தொடர்ந்திட மக்கள் வாக்களிப்பார்கள்.
ஆனால் நேரடியாக மேயரை தேர்ந்தெடுத்தால் ,தேர்ந்து எடுக்கப்பட்டவரை 5 வருடம் சட்டரீதியாக எதுவும் செய்ய முடியாது.
எனவே கடந்த முறை அம்மாவால் வாய்ப்பளிக்கப்பட்டு வென்றவர்கள் சில பேர் கட்சிக்காரர்களை கண்டுகொள்ளவே இல்லை.
அவர்களின் சுயநலம் இறுதியில் கழகத்திற்கே மறைமுகமாக துரோகம் செய்தது.
ஆனால் இந்த சட்ட திருத்தத்தால் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் கீழ்மட்ட தொண்டனை சந்தித்தே ஆக வேண்டும்.
ஏனெனில் அதிக எண்ணிக்கை கொண்ட கவுன்சிலர்கள் வந்தால் தான் மாநகராட்சியை வெல்ல முடியும்.
எனவே மேயர் கனவு உள்ள எல்லா நிர்வாகிகளும் கண்டிப்பாக கவுன்சிலராக முயற்சி செய்வர்.
தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் சில கலகக்காரர்களுக்கு.
சமூக பொருளாதாரத்தில் சற்று பின் தங்கியுள்ள ,வெல்ல வாய்ப்பு உள்ள அடிமட்ட தொண்டர்கள் கை தூக்கி விடப்படுவார்கள்.
சில மாநகரங்களில் சாதி எண்ணிக்கையில் குறைவாக கழக விசுவாசத்தில் நிறைவாக உள்ளோருக்கு வாய்ப்பு கிடைக்கும். கவுன்சிலராக இருந்து மேயராக தேர்ந்து எடுக்கப்படுபவர் கழக விசுவாசத்திலும் மக்கள் பணியிலும் தவறு செய்தால் நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் பதவி இழக்க நேரிடும். அந்த பயமே மேயர்களை, கழக கவுன்சிலர்களையும் பொது மக்களையும் மதித்து வாழ தோன்றும்.
மக்கள் ஆதரவில்லா எதிரிகளை பற்றி கவலையில்லை... ஒன்று கூடி வந்தாலும் எதிரிகளுக்கு தோல்வியே.
வரும் தேர்தலில் மாண்புமிகு அம்மாவின் நல்லாட்சி நலத்திட்டங்களை கூறி மக்களின் ஆதரவை பெற்றிடுவோம்.
வாய் பேச்சில் வீரம் கொள்ளாமல் களப்பணியை துவக்கிடுவோம் சாதி மத பேதம் தவிர்த்திடுவோம் .
இரட்டை இலையே நம் இலக்கு.
இல்லாமை இல்லாமல் செய்திடும் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களுக்கு வெற்றியை காணிக்கையாக்குவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross