நடப்பது என்ன? வாட்ஸ் அப் குழுமம் சார்பாக - ஜூலை 4 அன்று - மாவட்ட ஆட்சியரிடம்,
காயல்பட்டினம் பகுதியில் - பண்டிகை தினங்களில்
பலமுறை மின்வெட்டு ஏற்படுவது குறித்தும்,
வெள்ளிக்கிழமைகளில் மாதாந்திர பராமரிப்பு என நாள் முழுவதும் மின்வெட்டுகள் செய்யப்படுவது
குறித்தும்,
காயல்பட்டினம் அப்பாபள்ளி - ரெட் ஸ்டார் அருகில் உள்ள மின்கம்பம் பழுதடைந்துள்ளது குறித்தும் - மனு வழங்கப்பட்டது.
இம்மனுவினை - குழுமம் சார்பாக அந்த குழும உறுப்பினர்கள் நெட்காம் புஹாரி, வக்கீல் ரபீக் மற்றும் முத்து இஸ்மாயில் ஆகியோர்
சமர்ப்பித்திருந்தனர்.
இந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் - ஜூலை 18 அன்று மீண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் நினைவூட்டல் மனு
வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து - அந்த மனுக்களுக்கான பதில்கள் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
அந்த இரு மனுக்களையும் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள மின்வாரியம் அதிகாரி,
>>> வெள்ளிக்கிழமைகளில் இனி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும்,
>>> அப்பாபள்ளி அருகில் உள்ள இரு மின்கம்பங்களில் ஒரு மின்கம்பம் - சிமெண்ட் கொண்டு பூசப்படும் என்றும், மற்றொரு மின்கம்பம் விரைவில்
மாற்றப்படும்
என்றும் தெரித்துள்ளார்.
வெள்ளிக்கிழமைகளில் மாதாந்திர பராமரிப்பு கூடாது என்றும், பண்டிகை தினங்களில் மின்வெட்டு தவிர்க்கவேண்டும் என்றும் கொடுக்கப்பட்ட மனு
மேலே உள்ள மனு குறித்து மின்வாரியம் வழங்கியுள்ள பதில்
அப்பாபள்ளி - ரெட் ஸ்டார் சங்கம் அருகில் மின்கம்பம் பழுதடைந்துள்ள காட்சி
மின்கம்பங்களை சரிசெய்வது குறித்து மின்வாரியம் வழங்கியுள்ள பதில்
தகவல்:
நடப்பது என்ன? சமூக ஊடக குழுமத்தின் முகநூல் பக்கம்
https://www.facebook.com/nadappathuenna.kpm |