நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு, இம்மாதம் 13ஆம் நாளன்று - தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த செய்தியறிக்கை:-
தூத்துக்குடி மாவட்டத்தில் – நபிகள் நாயகம் பிறந்த நாளான 13.12.2016. அன்று, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை / பார்) விதிகள் 2003 விதி 12 துணை விதி (1)இன் படி அனைத்து அரசு மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள், எஃப்.எல். 2, எஃப்.எல். 3, எஃப்.எல். 3ஏ உரிமத்திலுள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தைப் பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|