இறைவழி மருத்துவக் குழுமம் - தமிழ்நாடு அமைப்பின் சார்பில், காயல்பட்டினத்தில் அக்குபஞ்சர் சிகிச்சை & மனநல ஆலோசனை முகாம், 17.12.2016. சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. இதுகுறித்து பெறப்பட்டுள்ள விபரம் வருமாறு:-
“இறைவழி மருத்துவக் குழுமம் - தமிழ்நாடு” சார்பில்,
காயல்பட்டினத்தில் அக்குபஞ்சர் - சலுகைக் கட்டண சிகிச்சை முகாம்!
இன்ஷா அல்லாஹ்...
நாள்:
17.12.2016. சனிக்கிழமை
நேரம்:
10:00 மணி முதல் 14:30 மணி வரை
இடம்:
கம்பல்பக்ஷ் அல்ஹாஜ் S.H.பாக்கர் ஸாஹிப் இல்லம்
(SK மாமா வீடு அருகில்...)
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
தொடு சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற அக்குஹீலர்கள் இம்முகாமில் - மன / உடல் நல ஆலோசனைகளும், அக்குபஞ்சர் சிகிச்சையும் வழங்கவுள்ளனர்.
முன்பதிவுக்கு...
>>> எத்தனை பேர் கலந்துகொள்கிறீர்கள் என்ற விபரத்தை, “+91 98420 65028” என்ற எண்ணுக்கு Whatsapp / Telegram மூலமோ அல்லது இன்டர்நெட் வசதியில்லாதவர்கள் நேரடியாக கால் செய்தோ முன்பதிவு செய்துகொள்ளலாம்...
>>> முன்பதிவு செய்தோர் மட்டுமே முகாமில் கலந்துகொள்ள இயலும்.
>>> தேவையான அளவு முன்பதிவு செய்யப்பட்டுவிட்டால், முன்பதிவு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்படும்.
>>> தேவையான அளவுக்கு முன்பதிவு செய்யப்படவில்லையெனில், இம்முகாம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்படும்.
>>> ஏற்கனவே சிகிச்சை பெற்றோரும், புதிதாக சிகிச்சை பெற விரும்புவோரும் இதில் பங்கேற்கலாம்.
>>> சிகிச்சைக்கான சலுகைக் கட்டணமாக ரூ.100 மட்டும் பெறப்படும். (இன்ஷாஅல்லாஹ், இனி வருங்காலங்களில் வழமையான சேவைக் கட்டணத்தில் சிகிச்சையளிக்கப்படும்.)
>>> மேற்குறிப்பிடப்பட்டுள்ள எண்ணில் முறைப்படி முன்பதிவு செய்து, சிகிச்சையின்போது முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதிச் சீட்டு (டோக்கன்) வழங்கப்படும்.
இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் அவசியம் பயன்படுத்திக்கொள்ளவும், இத்தகவலை உங்களுக்கு அறிமுகமான அனைவருக்கும் பகிரவும் வேண்டுகிறோம். நன்றி!!!
தகவல்:
காயல்பட்டினத்திலிருந்து...
எஸ்.கே.ஸாலிஹ்
(ஒருங்கிணைப்பாளர், இறைவழி மருத்துவக் குழுமம்) |