தூத்துக்குடி மாவட்டத்தின் புகழ்பெற்ற க்ரிக்கெட் வீரர்களுடன் காயல் வீரர்களும் இணைந்தாடும் “KAYAL BIG BASH LEAGUE” க்ரிக்கெட் சுற்றுப்போட்டி, காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் - KSC மைதானத்தில், மே 08 முதல் 14ஆம் நாள் வரை நடத்தப்படவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தின் தலைசிறந்த க்ரிக்கெட் வீரர்களையும், காயல்பட்டினம் க்ரிக்கெட் வீரர்களையும் கொண்டதாக 6 அணிகள் பங்கேற்கும் வகையில் இப்போட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 12.00 மணி முதல் 18.00 மணி வரை - என கால அளவைக் கொண்டு, ஒரு நாளுக்கு 3 போட்டிகள் என்ற முறையில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இச்சுற்றுப் போட்டியில் பங்கேற்க விரும்பும் அணிகள், +91 9840 88 77 27 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு, KBBL நிர்வாகத்தால் ஏற்கனவே கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.
இச்சுற்றுப் போட்டிக்கான முன்பதிவு துவக்க விழா & இலச்சினை வெளியீட்டு விழா, 15.03.2017. அன்று காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் - KSC மைதானத்தில் நடைபெற்றது.
சுற்றுப்போட்டிக் குழுவின் செய்தி தொடர்பாளர் எம்.பி.எஸ்.அபூபக்கர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். KSC செயலாளர் பேராசிரியர் கே.எம்.எஸ்.சதக்கு தம்பி இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வீரர்கள் முன்பதிவை முறைப்படி துவக்கி வைத்ததோடு, சுற்றுப் போட்டிக்கான இலச்சினையையும் வெளியிட்டு அறிமுகப்படுத்தினார்.
KSCயின் மூத்த வீரர்கள் உள்ளிட்ட விளையாட்டு ஆர்வலர்கள் இவ்விழாவில் திரளாகக் கலந்துகொண்டனர்.
தகவல்:
M.M.ஷாஹுல் ஹமீத் மூலமாக,
M.B.S.அபூபக்கர்
(செய்தி தொடர்பாளர் - KAYAL BIGBASH LEAGUE)
6-A, Sea Customs Road, Kayalpatnam – 628 204.
Email: kayalbigbashleague@gmail.com |