காயல்பட்டினம் கடற்கரையோரம் கட்டப்பட்டு வரும் வணக்கஸ்தலம் குறித்து நடப்பது என்ன? குழுமம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
காயல்பட்டினம் கடற்கரை பகுதியில், கடற்கரை பூங்காவிற்கு வடக்கே - கிருஸ்துவ வணக்கஸ்தலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
CRZ பகுதிக்குள், அரசு நிலத்தில், மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சியின் அனுமதி பெறப்படாமல் நடைபெற்றுவரும் இந்த கட்டுமானங்கள் சம்பந்தமாக - முழு விபரங்கள், தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவு, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோரின் கவனத்திற்கு - நடப்பது என்ன? குழுமம் மூலம் - ஏற்கனவே கொண்டு செல்லப்பட்டுள்ளது.
CRZ விதிமுறைகள் மீறப்படுவதை கருத்தில் கொண்டு - தற்போது, இது சம்பந்தமான புகார் மனு - தமிழக அரசின் தலைமை செயலர் திருமதி கிரிஜா வைத்யநாதன் IAS, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசு முதன்மை செயலர் திரு முஹம்மது நசீமுத்தீன் IAS, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் திரு அதுல்ய மிஸ்ரா IAS மற்றும் தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கண்ணன் ஆகியோருக்கும் - நடவடிக்கை எடுக்க கோரி, நடப்பது என்ன? குழுமம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது.
அம்மனுவில் - கள ஆய்வுகள் மேற்கொண்டு, சட்டத்திற்கு புறம்பான அனைத்து கட்டுமானங்களையும் அப்புறப்படுத்த கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|