காயல்பட்டினம் கடற்கரையோரம் கட்டப்பட்டு வரும் வணக்கஸ்தலம் குறித்து நடப்பது என்ன? குழுமம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:
காயல்பட்டினம் கடற்கரை பகுதியில், கடற்கரை பூங்காவிற்கு வடக்கே - வணக்கஸ்தலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
CRZ பகுதிக்குள், அரசு நிலத்தில், மாவட்ட ஆட்சியர் மற்றும் நகராட்சியின் அனுமதி பெறப்படாமல் இந்த கட்டுமானம் அமைந்துள்ளதாக பெறப்பட்ட தகவல்கள் அடிப்படையில் - இவ்விசயம் குறித்த முழு விபரங்கள், தமிழக முதல்வரின் சிறப்பு பிரிவு, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோரின் கவனத்திற்கு - நடப்பது என்ன? குழுமம் மூலம் - கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதனை அறியத்தருகின்றோம்.
அக்கடிதத்தில் - கள ஆய்வுகள் மேற்கொண்டு, சட்டத்திற்கு புறம்பான அனைத்து கட்டுமானங்களையும் அப்புறப்படுத்த கோரப்பட்டுள்ளது.
இவ்வாறு அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|