காயல்பட்டினம் நகராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 9411 ரேஷன் அட்டைகளில் 225 ரேஷன் அட்டைகள் - AAY வகையை சார்ந்தவை; 2880 ரேஷன் அட்டைகள் PHH வகையை சார்ந்தவை; மீதி ரேஷன் அட்டைகள் NPHH வகையை சார்ந்தவை என அரசு தரப்பு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
AAY (Antyodaya Anna Yojana) என்பது வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு வழங்கப்படும் குடும்ப அட்டைகளாகும்.
PHH (Priority Household) என்பது அரசு மானியங்கள் பெற தகுதியானவர்கள் என மத்திய அரசு விதிமுறைகள்படி அடையாளம் காணப்பட்டுள்ள குடும்பங்கள்
NPHH (Non-Priority Household) என்பது அரசு மானியங்கள் பெற அவசியமில்லாதவர்கள் என மத்திய அரசு விதிமுறைகள்படி
அடையாளம் காணப்பட்டுள்ள குடும்பங்கள்
மாநிலத்தில் உள்ள அணைத்து ரேஷன் அட்டைகளும் - PHH / NPHH வகை என சில வாரங்களுக்கு முன்பே - அடையாளம் காணப்பட்டு விட்டதாக - அரசு தரப்பு தெரிவிக்கிறது. காயல்பட்டினத்தில் எந்த எண்ணிக்கையில் PHH வகை ரேஷன் அட்டைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளது என்ற விபர சாராம்சம் - ரேஷன் கடைகள் வாரியாக - இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு (PHH / NPHH) பிரிக்கப்பட்டதால், பொது மக்களுக்கு கிடைக்கும் எந்த பொருளிலும் மாற்றங்கள் இருக்காது என சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரிகள் நடப்பது என்ன? குழுமத்திடம் தெரிவித்தனர்.
இந்த பிரிவுகள் - மத்திய அரசின் National Food Security Act (NFSA) சட்டத்தை அமல்படுத்தவேண்டிய நிலையில் தமிழகம் உள்ளத்தால் உருவாக்கப்பட்டது என்றும், அந்த சட்டத்தின்படி - ஏழை மக்கள் என அடையாளம் காணப்பட்டவர்களுக்கு மட்டுமே ரேஷன் சலுகைகள் வழங்க வேண்டும் (Targetted PDS) என்றும், ஆனால் - தமிழகத்தில் காலகாலமாக அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் (Universal PDS) என்ற வழிமுறையே பின்பற்றப்படுகிறது என்றும், இந்த கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது என அரசு அறிவித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் - மத்திய அரசு, மாநில அரசுக்கு மானிய விலையில் ஒதுக்கும் பொருட்கள் - PHH அளவில் தான் இருக்கும் என்றும், NPHH அட்டைகளை வழங்கப்படும் பொருட்களுக்கான மானிய செலவீனங்களுக்கு - மாநில அரசு பொறுப்பேற்கும் என்றும் தெரிகிறது.
|