காயல்பட்டினம் மகுதூம் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ.கே.எஸ்.ஷாஃபிஈ உடைய தாயார், மகுதூம் தெருவைச் சேர்ந்த கத்தீபு நூர் ஜஹான், இன்று 20.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 81. அன்னார்,
கத்தீபு மஹ்மூத் ஹாஜி அவர்களின் மகளும்,
மர்ஹூம் ஏ.கே.எஸ்.மொகுதூம் முஹம்மத் அவர்களின் மருமகளாரும்,
மர்ஹூம் ஏ.கே.எஸ்.ஷேக் அப்துல் காதிர் என்ற ஏ.கே.எஸ்.ஷேகு ஹாஜி அவர்களின் மனைவியும்,
கே.எம்.எஸ்.செய்யித் அலவீ, மர்ஹூம் கத்தீபு முஸ்ஸம்மில் ஆகியோரின் சகோதரியும்,
ஏ.கே.எஸ்.மொகுதூம் முஹம்மத் (CM), மகுதூம் ஜும்ஆ மஸ்ஜிதின் நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ.கே.எஸ்.முஹம்மத் ஷாஃபிஈ, ஏ.கே.எஸ்.மஹ்மூத், ஏ.கே.எஸ்.ஹாமித் ஆகியோரின் தாயாரும்,
கத்தீபு எஸ்.ஏ.செய்யித் அஹ்மத், எஸ்.ஏ.மொகுதூம் முஹம்மத் (AKS) ஆகியோரின் மாமியாரும்,
எம்.எம்.ஷேக் அப்துல் காதிர், எம்.எம்.செய்யித் அலவீ, எச்.ஷேக் அப்துல் காதிர் ஆகியோரின் தந்தையின் தாயாரும்,
கத்தீபு எஸ்.ஏ.செய்யித் அலவீயின் தாயாரின் தாயாருமாவார்.
அன்னாரின் ஜனாஸா, 09.03.2017. வியாழக்கிழமையன்று ளுஹ்ர் தொழுகைக்குப் பின், மகுதூம் ஜும்ஆ மஸ்ஜிதில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
தகவல்:
முஹம்மத் அலீ
மகுதூம் தெரு, காயல்பட்டினம்.
[விரிவான தகவல் இணைக்கப்பட்டுள்ளது @ 09:14 / 09.03.2017.]
|