மைக்ரோகாயல் அமைப்பின் சார்பில், நிகழும் மார்ச் மாதம் 10 முதல் 18ஆம் நாள் வரை, Kayal Medical Card வினியோகிக்கப்படவுள்ளது. இதுகுறித்து அவ்வமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலறிக்கை:-
அஸ்ஸலாமு அலைக்கும்,
மைக்ரோகாயல் மற்றும் ஷிஃபா ஹெல்ட் அண்ட் வெல்பேர் டிரஸ்ட் நம் KMT மருத்துவமனையுடன் இணைந்து பைலட் ப்ராஜக்ட் என்ற முறையில் 2013 செப்டம்பர் முதல் 2014 மார்ச் வரை சுமார் 50 பயனாளி குடும்பங்களுக்கும், 2014-2015 நிதியாண்டில் சுமார் 220 பேருக்கும், 2016-2017 நிதியாண்டில் காயல் வெல்பேர் அசோசியசன், அபுதாபியுடன் இணைந்து சுமார் 190 பேருக்கும் இந்த காயல் மெடிக்கல் கார்டு வழங்கி இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
இந்த திட்டத்தின் மூலம் மருத்துவ கன்சல்டேசன், பரிசோதனைகள், மருந்துகள் ஆகியவற்றின் மதிப்பில் 25% முதல் 50% வரையில் மட்டும் பயனாளிகளால் செலுத்தி வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் நல்ல மருத்துவ சேவையை பெற்றுள்ளனர்.
மைக்ரோகாயல் மற்றும் ஷிஃபா ஹெல்ட் அண்ட் வெல்பேர் டிரஸ்ட் , KMT மருத்துவமனையுடன் இணைந்து செயல்படுத்தும் காயல் மெடிக்கல் கார்டுக்கான (KMC) 2017-2018 பருவ வருட விண்ணப்பங்கள் இன்ஷா அல்லாஹ் இன்று (மார்ச் 10 - 18) முதல் கீழ்க்காணும் இடங்களில் வினியோகிக்கப்படும்.
(1) எல்.டி.எஸ் ஜுவல்லர்ஸ்,
எல்.கே.லெப்பைதம்பி சாலை,
காயல்பட்டணம்.
(2) ஷிஃபா ஹெல்ட் அண்ட் வெல்பேர் டிரஸ்ட்,
சதுக்கை தெரு, காயல்பட்டணம்.
இந்த சேவையை கீழ்காணும் நபர்கள் மற்றும் பெற தகுதியானவர்கள்:
(1) மஸ்ஜித், மதரசாவில் பணிபுரிபவர்கள்
(2) இஸ்லாத்தில் திரும்பியவர்கள்
(3) விதவைகள்
(4) அனாதைகள்
(5) வீட்டில் உழைக்க சக்தி படைத்தவர்கள் இன்றி வாழ்பவர்கள்
மேலும் மேற்கூறப்பட்ட 5 வகையினரும் ஜகாத் வாங்க தகுதியானவர்களாகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்ப மாதிரி:-
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|