இம்மாதம் 11ஆம் நாள் சனிக்கிழமையன்று, காயல்பட்டினத்தில் - குடும்ப அட்டைகள் குறைதீர் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் இதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளைச் செய்து வருகிறது. விரிவான விபரம்:-
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரது அறிவுரையின்படி, காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியிலுள்ள குடும்ப அட்டைகள் (ரேஷன் கார்டு) குறைதீர் சிறப்பு முகாம், இம்மாதம் 11ஆம் நாள் சனிக்கிழமையன்று 10.00 மணி முதல் 13.00 மணி வரை, காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க (USC) வளாகத்தில் நடைபெறவுள்ளது.
குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், குடும்பத் தலைவரை மாற்றம் செய்தல், புதிதாகப் பிறந்த குழந்தையின் பெயரைச் சேர்த்தல், முகவரி மாற்றம் உள்ளிட்ட தேவைகளை பொதுமக்கள் நிறைவேற்றிக்கொள்ளலாம்.
திருச்செந்தூர் வட்ட வழங்கல் அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் இம்முகாமில் பங்கேற்று, குடும்ப அட்டைகள் தொடர்பான மேற்படி சேவைகளை உடனுக்குடன் வழங்கவுள்ளதால், பொதுமக்கள் இந்த வாய்ப்பைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளுமாறும்,
முகாமுக்கு வருவோர் - கைவசம் கொண்டு வர வேண்டிய ஆவணங்களின் உண்மைப் பிரதி (ஒரிஜினல்), நகல் ஆகிய இரண்டையும் இணைத்துக் கொண்டு வருமாறும், இம்முகாமை ஒருங்கிணைக்கும் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்த விபரங்களடங்கிய பிரசுரம் வருமாறு:-
|