உலக காயல் நல மன்றங்களின் மருத்துவத் துறை கூட்டமைப்பான காயல்பட்டினம் ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் ட்ரஸ்ட் சார்பில், 18.03.2017. சனிக்கிழமையன்று, “மக்கள் மருந்தகம் - Generic Medical Shop” திறப்பு விழா காணவுள்ளது. இதுகுறித்து, ஷிஃபா நிர்வாக அலுவலர் ‘கண்டி’ ஸிராஜ் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
உலக காயல் நல மன்றங்களின் அனுசரனையில், நம் காயல் மாநகரில் மருத்துவ சேவையாற்றும் அமைப்பு ஷிஃபா ஹெல்த் & வெல்ஃபர் அறக்கட்டளையாகும்.
ஆங்கில மருந்துகளை - பொதுவான மருந்துக் கடைகளில் பெருந்தொகை கொடுத்தே வாங்க வேண்டிய இக்காலத்தில், அதை விட பன்மடங்கு குறைவாக - பொதுமக்கள் மிகவும் மலிவான விலையில் மருந்துகளைப் பெறும் வகையில் மத்திய அரசின் மானிய உதவித் திட்டத்தைப் பயன்படுத்தி, பிரதம மந்திரி “மக்கள் மருந்தகம் “ எனும் ஜெனெரிக் மருந்து கடை - ஷிஃபா அறக்கட்டளை மூலம், பின்வரும் விபரப்படி இன்ஷாஅல்லாஹ் திறக்கப்படவுள்ளது:-
நாள்:
18.03.2017. சனிக்கிழமை
நேரம்:
17.00 மணி
நிகழ்விடம்:
தாஹா காம்ப்ளக்ஸ், மெயின் ரோடு, காயல்பட்டினம்.
முன்னிலை:
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்
(சட்டமன்ற உறுப்பினர், திருச்செந்தூர் தொகுதி)
“மக்கள் மருந்தகம்” நிறுவனத்தைத் திறந்து வைப்பவர்:
அல்ஹாஜ் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர்
(சட்டமன்ற உறுப்பினர், கடையநல்லூர் தொகுதி.)
தலைமையேற்று, முதல் விற்பனையைத் துவக்கி வைப்பவர்:
டாக்டர் முஹம்மத் இத்ரீஸ்
(தலைவர், ஷிஃபா அறக்கட்டளை)
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.M.முஜாஹித் அலீ
[செய்தி திருத்தப்பட்டது @ 23:44 / 15.03.2017.] |