தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைகளும், Priority Household (PHH) வகை அல்லது NPHH (Non-Priority Household) வகை என பிரிக்கப்பட்டுள்ளன. காயல்பட்டினம் நகராட்சி பகுதிகளில் உள்ள சுமார் 9411 ரேஷன் அட்டைகளில் 225 ரேஷன் அட்டைகள் - AAY வகையை சார்ந்தவை; 2880 ரேஷன் அட்டைகள் PHH வகையை சார்ந்தவை; மீதி ரேஷன் அட்டைகள் NPHH வகையை சார்ந்தவை என அரசு தரப்பு ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
உங்கள் ரேஷன் அட்டை எவ்வாறு, அதிகாரிகளால் வகைப்படுத்தப்பட்டுள்ளது என அறிந்திட - நடப்பது என்ன? குழுமம், தனது இணையதளத்தில் - PHH ரேஷன் அட்டைகள் விபரங்களை பதிவேற்றம் செய்துள்ளது.
கீழ்க்காணும் முகவரிக்கு சென்று -
http://kayal.org/ration
உங்கள் ரேஷன் அட்டை எண் விபரத்தை வழங்கினால், உங்கள் ரேஷன் அட்டை PHH வகையா, NPHH வகையா என உடனடியாக அறிந்திடலாம்.
நீங்கள் PHH வகையை சார்ந்தவர், ஆனால் NPHH வகை என உங்கள் ரேஷன் அட்டை வகைப்படுத்தப்பட்டுள்ளது என நீங்கள் நினைத்தால், இது குறித்த புகாரை - அரசுக்கு நீங்கள் மனுவாக வழங்கலாம் எனவும் - சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரி ஒருவர் - நடப்பது என்ன? குழுமத்திடம் தெரிவித்தார்.
காயல்பட்டினம் நகரில் PHH வகை என பிரிக்கப்பட்டுள்ள அனைத்து ரேஷன் அட்டைகளின் விபரங்களும் - நகரின் ஜமாத்துகளுக்கும், ஊர் நல கமிட்டிகளுக்கும் - நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம் சார்பாக வழங்கப்படவுள்ளது.
|