நியாய விலைக் (ரேஷன்) கடைகளில் பொதுமக்கள் வாங்காத பொருளை வாங்கியதாக குறுந்தகவல் – SMS பெறப்பட்டால் செய்ய வேண்டியதென்ன என்பது குறித்து, காயல்பட்டினம் “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கை:-
ரேஷன் கடையில் நீங்கள் ஒரு பொருள் சுத்தமாக வாங்கவில்லை அல்லது நீங்கள் வாங்கிய அளவு வேறு, நீங்கள் வாங்கியதாக வந்த குறுஞ்செய்தியில் காணப்படும் அளவு வேறு என்றால் - நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் இது தான்:
99809 04040 என்ற அலைபேசி எண்ணுக்கு - PDS 107 என்ற வாசகங்களை மட்டும் குறுஞ்செய்தியாக (SMS) அனுப்புங்கள்.
மேலும் வந்த SMS தகவலை பாதுகாப்பாக வைத்திருங்கள்.
புகார் தெரிவித்த பிறகு, இது சம்பந்தமாக உங்களை எந்த அதிகாரியும் தொடர்பு கொள்ளவில்லை என்றால் - இது குறித்த விபரத்தை “நடப்பது என்ன?” குழுமத்திற்கு தெரிவியுங்கள்.
எவ்வாறு புகார்களைப் பதிவு செய்யவேண்டும் என விளக்கும் காணொளி (VIDEO) காண இங்கு சொடுக்கவும்.
இது பொதுமக்கள் நலன் கருதி அரசே வெளியிட்டுள்ள காணொளி (VIDEO) காட்சியாகும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross