சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர - 12ஆவது பொதுக்குழுக் கூட்டம் - மார்ச் 19 ஞாயிற்றுக்கிழமையன்றும், உறுப்பினர் குடும்ப சங்கம நிகழ்ச்சிகள் ஏப்ரல் 01, 02 ஆகிய இரு நாட்களிலும் நடைபெறவுள்ளன. வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின்போது, 2017-2019 பருவத்திற்கான மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்தலும் நடைபெறவுள்ளது. உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்து, அவ்வமைப்பின் தலைவர் எம்.ஆர்.ரஷீத் ஜமான் வெளியிட்டுள்ள தகவலறிக்கை:-
அன்பார்ந்த உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்!
இறையருளால் நமது சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் வருடாந்திர - 12ஆவது பொதுக்குழுக் கூட்டம் & குடும்ப சங்கம நிகழ்ச்சிகள், இன்ஷாஅல்லாஹ் - மார்ச் 19 ஞாயிற்றுக்கிழமையன்று (நாளை) நடைபெறவுள்ளது.
நிகழ்முறை:
இம்முறை, நம் மன்றத்தின் 2017-2019 பருவத்திற்கான புதிய செயற்குழுவில் அங்கம் வகிப்பதற்காக ஏராளமான உறுப்பினர்கள் ஆர்வமுடன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். முறைப்படியான புதிய செயற்குழுவும் இதன்போது அறிவிக்கப்படவுள்ளது. கூட்ட நிகழ்முறை விபரம் வருமாறு:-
நாள்:
19 மார்ச் 2017 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்:
10:00 மணி
நிகழ்விடம்:
100 Jalan Sultan, #09-11, Sultan Plaza, Singapore 199001 (Sultan Plaza Association Meeting Hall).
மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் இக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கின்றோம். கூட்ட நிரல் வருமாறு:-
>> 2016ஆம் ஆண்டிற்கான - தணிக்கை செய்யப்பட்ட வரவு-செலவு கணக்கறிக்கை தாக்கல்
>> 2016ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை சமர்ப்பிப்பு
>> மன்றச் செயல்பாடுகள் தொடர்பாக கேள்வி - பதில் நிகழ்ச்சி
>> 2017-2019 பருவத்திற்கான புதிய செயற்குழு அறிவிப்பு
விரிவான நிகழ்முறை விளக்கமும், ஆண்டறிக்கையும் அனைத்து உறுப்பினர்களுக்கும் விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
குடும்ப சங்கம நிகழ்ச்சி:
வருடாந்திர பொதுக்குழுவை முன்னிட்டு, 01.04.2017 சனிக்கிழமையன்று 13:00 மணி முதல், 02.04.2017 ஞாயிற்றுக்கிழமை 10:30 மணி வரை, Changi Ferry Point Chalet 7யில் மன்ற உறுப்பினர்களின் குடும்ப சங்கம நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதுகுறித்த விரிவான விபரங்களும் உறுப்பினர்களுக்கு விரைவில் அனுப்பப்படும்.
ஒருநாள் ஊதிய நன்கொடை:
இக்குடும்ப சங்கம நிகழ்ச்சியின் முத்தாய்ப்பு அம்சமாக, நம் மன்றத்திற்கான கருவூல நிதி திரட்டும் செயல்திட்டங்களுள் ஒன்றான - “ஒருநாள் ஊதிய நன்கொடை” வழங்கும் திட்டம் திகழவுள்ளது.
கல்வி, மருத்துவத்திற்காக உதவிகள் கேட்டு – பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள காயலர்களிடமிருந்து நம் மன்றத்தால் பெறப்படும் தகுதியான விண்ணப்பங்களுக்கு நிறைவான உதவிகளை வழங்குவதே இத்திட்டத்தின் நிறைவான நன்னோக்கமாகும்.
இவ்வகைக்காக நன்கொடையளிக்க விரும்புவோர், 01.04.2017. சனிக்கிழமையன்று - நீங்கள் இவ்வகைக்காகப் பங்களிப்பு செய்ய ‘நிய்யத்’ (எண்ணம்) வைத்துக்கொள்ளுங்கள். குடும்ப சங்கம நிகழ்ச்சியின்போது வழங்கப்படும் வெள்ளை உறைக்குள் உங்கள் விருப்பத் தொகையை வைத்து, அதை மூடி முத்திரையிட்டுக் கொள்ளுங்கள். (அதில் உங்கள் பெயரைக் குறிப்பிட வேண்டாம்!)
பின்னர், நன்கொடை வைக்கப்பட்ட அவ்வெள்ளுறைகளை, அதற்கான பெட்டிக்குள் இடுங்கள். அனைத்து உறைகளும் பெறப்பட்ட பின்னர், இத்திட்டத்தின் கீழ் சேகரமான மொத்தத் தொகையும் இன்ஷாஅல்லாஹ் எண்ணப்பட்டு, குடும்ப சங்கம நிகழ்ச்சியின்போதே அறிவிக்கப்படும்.
இவ்வகைக்காகவும், மன்றத்தின் அனைத்து தூய பணிகளுக்காகவும் பல்லாண்டு காலமாக மன நிறைவோடு உறுப்பினர்கள் அளித்து வரும் மகத்தான ஒத்துழைப்புகளை எல்லாம்வல்ல அல்லாஹ் தனதருளால் அங்கீகரித்து, அதற்கான நற்கூலிகளை ஈருலகிலும் நிறைவாக நல்கியருள்வானாக, ஆமீன்.
உங்கள் பெற்றோர், மனைவி - மக்கள் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் நல்ல உடல் நலனையும், நிம்மதியான - வளமான நல்வாழ்வையும், ‘பரக்கத்’ எனும் நல் அபிவிருத்தியையும் நிறைவாக வழங்கியருள்வானாக, ஆமீன்.
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பாக...
தகவல்:
M.M.மொகுதூம் முஹம்மத் (துணைத் தலைவர்) மூலமாக
K.M.N.மஹ்மூத் ரிஃபாய் (செயலாளர்)
|