காயல்பட்டினம் கடற்கரையோரம் சட்டத்திற்குப் புறம்பாக குருசடி கட்டப்பட்டு வருவது தொடர்பாக நாளை மறுநாள் கூடும் மாவட்ட CRZ மேலாண்மை குழு கூட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரி நடப்பது என்ன? குழுமம் மனு சமர்ப்பித்துள்ளது. இதுகுறித்த செய்தியறிக்கை:-
மார்ச் 22 புதனன்று மாலை 3:30 மணிக்கு - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிப்பிக்கூடத்தில், மாவட்ட CRZ மேலாண்மை குழு (DCZMA) கூடுகிறது.
இந்த குழுவின் தலைவர் - மாவட்ட ஆட்சியர் ஆவார். இதன் உறுப்பினர்கள் - மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (DEE) மற்றும் நகர ஊரமைப்பு இயக்ககத்தின் (DTCP) மண்டல துணை இயக்குனர் ஆகியோர் ஆவர்.
காயல்பட்டினம் கடற்கரைப் பகுதியில், கடற்கரைப் பூங்காவிற்கு வடகிழக்கே - கிறிஸ்துவ வழிபாட்டுத்தலம் ஒன்று CRZ விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வருவது குறித்து - இக்குழுவின் தலைவர் (மாவட்ட ஆட்சியர்) மற்றும் இரு உறுப்பினர்களின் ஒரு உறுப்பினரான மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளருக்கு ஏற்கனவே - நடப்பது என்ன? குழுமம் சார்பாக மனு வழங்கப்பட்டுள்ளது.
இக்குழு நாளை மறுநாள் கூடவுள்ள நிலையில், அதன் மற்றொரு உறுப்பினரான நகர ஊரமைப்பு இயக்ககத்தின் (DTCP) மண்டல துணை இயக்குனருக்கு நடப்பது என்ன? குழுமம் சார்பாக இன்று மனு வழங்கப்பட்டுள்ளது.
அம்மனுக்களில் - நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தில், சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் கட்டுமானத்தை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross