ஐக்கிய அரபு அமீரக அஸ்ஹர் ஜமாஅத்தின் விரிவான பொதுக்குழுக் கூட்டம், 17.03.2017. வெள்ளிக்கிழமையன்று, மதிய உணவு - மார்க்க வினாடி-வினா போட்டிகளுடன் நடைபெற்றுள்ளது. இதில் ஜமாஅத்தினர் திரளாகப் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்த தகவலறிக்கை:-
கடந்த 27.01.2017. அன்று, ஐக்கிய அரபு அமீரக அஸ்ஹர் ஜமாஅத் தலைவர் விளக்கு தாவூத் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி, அமீரக அஸ்ஹர் ஜமாஅத்தின் விரிவான பொதுக்குழுக் கூட்டம், 17.03.2017. வெள்ளிக்கிழமையன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின், துபை அல்தவார் பூங்காவில் மதிய உணவாக காயல்பட்டினம் பாரம்பரிய களறி விருந்துபசரிப்புடன் துவங்கியது.
விருந்தைத் தொடர்ந்து கூட்ட நிகழ்ச்சிகள் துவங்கின. அமீரக அஸ்ஹர் ஜமாஅத் தலைவர் விளக்கு தாவூத் அவர்கள் தலைமை தாங்கினார். அதன் செயற்குழு உறுப்பினர் மக்பூல் அவர்கள் முன்னிலை வகிக்க, ஜமாஅத் செயலாளர் எம்.எல்.ஃபிர்தவ்ஸ் அவர்கள் வரவேற்றுப் பேசினார்.
அமைப்பின் நோக்கங்கள் & இதுநாள் வரையிலான செயல்பாடுகள் குறித்து, செயற்குழு உறுப்பினர் டீ.ஏ.எஸ்.மீரா ஸாஹிப் அவர்கள் விளக்கிப் பேசினார்.
இக்கூட்டத்தில், எஸ்.இப்னு ஸஊத் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, அமைப்பின் பணிகளை வாழ்த்திப் பேசியதுடன், வட்டியில்லா கடன் வழங்கும் திட்டமான ‘ஜன்சேவா’ குறித்தும் விளக்கிப் பேசி, பொதுமக்களின் ஆதரவைக் கோரினார்.
அஸ்ர் தொழுகைக்குப் பின் - தேனீர், சிற்றுண்டி உபசரிப்பைத் தொடர்ந்து, வினாடி-வினா உள்ளிட்ட சன்மார்க்கப் போட்டிகள் நடைபெற்றன. ஆண்களுக்கான போட்டிகளை, எம்.எஸ்.அப்துல் ஹமீத் - இர்ஃபான் ஆகியோர் இணைந்து நடத்தினர். நிறைவில், வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
செயற்குழு உறுப்பினர் பீ.எம்.ஹுஸைன் நூருத்தீன் அவர்கள் நன்றி கூறினார். இக்கூட்டத்தில், புதியோர் பலர் தம்மை அமைப்பில் உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். ஜமாஅத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர். மகளிருக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
ஐக்கிய அரபு அமீரகம் - துபையிலிருந்து...
K.S.முஹம்மத் யூனுஸ்
செய்தியாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ் |