சஊதி அரபிய்யா - தம்மாம் காயல் நல மன்றத்தால் நடத்தப்பட்ட பொதுக்குழுக் கூட்டத்தில், மன்றத்தின் நகர்நலத் திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது. திரளான காயலர்கள் பங்கேற்றுள்ளனர். இதுகுறித்து, அவ்வமைப்பின் செயலாளர் தம்மாம் இஸ்மாஈல் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் வல்ல அல்லாஹ் ஒருவனுக்கே. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
சௌதி அரேபியா தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் 78வது பொதுக்குழு கூட்டம், 10.02.2017 அன்று தம்மாம் - SAFA MEDICAL CENTRE ஹாலில் வைத்து சிறப்பாக நடைபெற்று முடிந்தன. அல்ஹம்து லில்லாஹ்
இந்த நிகழ்வை இளவல் ஜைனுல் ஆப்தீன் நவ்பல் கிராஅத் ஓதி துவங்கி வைக்க, மன்றத்தில் செயற்குழுஉறுப்பினர்களில் ஒருவரான ஜனாப். அப்துல் காதர் அவர்கள், வந்திருந்த அனைவர்களையும் வரவேற்றுஅமர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து மன்றத்தின் தலைவர் ஜனாப் அஹ்மது ரபீக் அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார்கள்.
அவர்களின் உரையில்
- சென்ற பொதுக்குழுவிற்கும் , இந்த பொதுக்குழுவிற்கும் இடையில் மன்றத்தால் செய்யப்பட உதவிகளான
ஷிஃபா மூலம் நடைபெற்ற மருத்துவ உதவிகள்,
இக்ரா மூலம் கொடுக்கப்பட்ட கல்வி உதவிகள் ,
உலககாயல் நல மன்றங்கள் மூலம் நமதூரில் தொடங்கப்படவிருக்கின்ற ஜெனரிக் மெடிசின் மருந்தகத்திற்கு தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் மூலம் ரூபாய் 85,000.00 வழங்கப்பட்து குறித்தும் தனது உரையில் குறிப்பிட்டார்.
அடுத்ததாக, மன்றத்தின் செயலாளர் ஜனாப் செய்யத் இஸ்மாயில் (தம்மாம் இஸ்மாயில் ) அவர்கள் மன்றத்தின் அனைத்து விபரங்களையும் விரிவாக விவரித்து, அதன் நடப்புத்தன்மை, நடந்த விபரம், இன்ஷா அல்லாஹ் நடக்க திட்டமிடப்பட்டு இருக்கும் செயல்பாடுகள் போன்றியவற்றை விளக்கினார்.
பின்னர், SPECIAL PROJECT ஒருங்கிணைப்பாளர் ஜனாப் இம்தியாஸ் புஹாரி அவர்கள், மன்றத்தால்செயல்படுத்தப்படும் விசேச உதவிகளான மாதாந்திர உணவு பொருட்கள் வழங்குதல் திட்டம், BEACH CLEANING, ஜெனரிக் மருந்தின் நன்மைகள் குறித்து விபரமாக விவரித்தார்.
இந்த வருடம் இன்ஷா அல்லாஹ் செயல்படுத்தப் போகும் திட்டங்களைப் பற்றியும் குறிப்பிட்டு, மன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பை தருமாறும் வேண்டிக்கொண்டார்.
தம்மாம் பகுதிக்கு புதிதாய் வந்துள்ள சகோதரர்களான மருந்தியல் ஆராச்சியாளர் , பேராசிரியர் அ.ர.ஹபீப் முஹம்மது அவர்கள் தங்களைஅறிமுகப் படுத்திக்கொண்டு, மன்றத்தில் இணைத்துக் கொன்டார். மேலும் அவர் ஜெனரிக் மருந்தின் நன்மை தீமைகள் குறித்து விளக்கினார். மேலும் இயற்கை முறை வாழ்வியல் பற்றியும் விவரித்தார்.
அதன் பின்னர் புதிய வரவான சகோதரர்கள் மீரான் முஸ்தபா, செய்யத் முஹம்மத் ரிபாய் ஆகியோரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு மன்றதில் இணைந்துக் கொண்டார்கள்.
மன்றத்தின் பொருளாளர் ஜனாப். இப்ராஹிம் அவர்கள், நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்தார்.
மன்றத்தின் உறுப்பினர்களின் கருத்துக்களும், ஆலோசனைகளும் பரிமாறப்பட்டன.
அனைவர்களுக்கும் சிற்றுண்டி பரிமாறப்பட்டு, மன்றத்தின் துணைத்தலைவர்களில் ஒருவரான ஜனாப் சாளை ஜியாவுத்தீன் அவர்களின் நன்றி உரையில் வல்ல இறைவனுக்கும், வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் ,குறிப்பாக நம் மன்றத்திற்கு தொடர்ந்து சந்தாவும் ,நன்கொடைகளையும் வழங்கி வரும் திருச்சியை சேர்ந்த ஜனாப்.அப்பாஸ் பாய், ஜனாப்.முபாரக் பாய், ZAMIL OFFSHORE.ஜாஹிர் பாய், ஏரல் மதார்ஷா பாய் ஆகியோருக்கும் சிறப்பு நன்றிகளை தெரிவித்தார் .
துஆ ஓதி மனநிறைவுடன் இனிதே நிறைவு பெற்றது.
மிகக் குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்டு கூட்டப்பட்ட இப்பொதுக்குழுக் கூட்டத்தில், மன்றத்தின் உறுப்பினர்கள் திரளாகக்கலந்து கொண்டனர். அல்ஹம்து லில்லாஹ்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தம்மாம் காயல் நல மன்றம் சார்பாக...
தகவல்:
முத்துவாப்பா (செயற்குழு உறுப்பினர்)
|