கடற்கரை வடபகுதியில் தொழுமிடம் அமைப்புப் பணிக்கான துவக்க நிகழ்ச்சி இன்று மாலையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை செய்து வருகிறது.
இந்நிகழ்ச்சி குறித்து - காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை அமைப்புக்கு, மனிதநேய ஜனநாயக கட்சி கடிதம் ஒன்று எழுதியுள்ளது. அதன் விபரம் வருமாறு:
2. Re:... posted byNUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA)[17 March 2017] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45356
இது ஒன்றும் சட்ட விரோத செயல் இல்லை .பலகாலம் இது விஷயத்தில் நமது ஐக்கிய பேரவை போராடி வருகிறது . அரசின் மெத்தன போக்கு அல்லது வேண்டுமென்றே தொடர்ந்து கட்ட அனுமதி வழங்கி வருகிறது அரசின் வருவாய் துறை.
இப்படி ஒரு தகவல் அரசின் காதிற்கு எட்டுமேயானால் உடனே வருவார்கள் . அபோது தான் நியாயம் கிடைக்கும். இது கூட தெரியாமல் உடனே கடிதம் எழுதுவது நல்லது இல்லை . ஊரின் ஒற்றுமையை குலைக்கும் செயல் . கருத்து வேறுபாடு இருந்தால் நமது ஐக்கிய பேரவைக்கு சென்று முறையிடலாம் . அதை விட்டு விட்டு நீங்களே தூபம் போடுவது நன்றன்று.இதனை பொதுத்தளத்தில் பிரசுரிப்பதும் நன்றா என்பதை எண்ணிப்பார்க்குமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.
4. சூழ்ச்சி காரனுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன் அல்லாஹ்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[18 March 2017] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 45359
சகோதரர் நுஸ்கி அவர்களின் கருத்தோடு நான் ஒருங்கிணைகிறேன்!
ஒற்றுமையையும்,ஒருங்கிணைப்பையும்,ஊர் நலன்நாடியும் ஐக்கிய பேரவை உங்களை (ம.ஜ.க வை) அழைத்திருந்தால், அதற்குரிய சம்மத கருத்தை அவர்களிடம் நேரிடியாக் சென்று சொல்லியிருக்கலாம்.உங்கள் கருத்து 100% சரி என்று படுமேயானால்.
அதைவிட்டுவிட்டு பொதுத்தளத்தில் போடும்பொழுது,அந்த கருத்து பிறிதொரு சாராருக்குறிய சாதகநிலைப்பாடான நிலையையடைய ,தாங்களே ஒரு காரணியாக அமைந்திவிட நேர்கிறது. தங்களின் கருத்தை (அது சரியாகவே இருந்தாலும்)அதை வெளிப்படுத்தும் முறை முற்றிலும் சரியான வழியல்ல என்பதே என் கருத்து!
எல்லாவற்றிலும் வெளிப்படைத்தன்மை என்ற சிந்தாந்தத்திற்குள் நீங்கள் நுழைவீர்களேயானால்,சில விஷயங்களை "ஹிக்மத்துடன் " செயல்படுத்தவேண்டும் என்ற வழிகாட்டும் வாழ்வுமுறை சம்பவங்களை சந்தித்த தலைமுறைகள்தான் நாம். சூழ்ச்சி காரனுக்கெல்லாம் சூழ்ச்சிக்காரன் நான் என்று அல்லாஹ்வே கூறி இருக்கிறான்.அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
5. Re:...அரசியல்வாதிகள் எப்படியும் பேசலாம் posted bymackie noohuthambi (colombo)[19 March 2017] IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45361
அரசியல்வாதிகள் எப்படியும் பேசலாம். நாளொரு மேடை பொழுதொரு நடிப்பு என்பதுதான் அநேகமான அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக கழகம் என்ற அரசியல் இயக்கம் ஆரம்பிப்பதற்கு மறுப்பு தெரிவித்த பீ ஜெயினுள் ஆபிதீன் அவர்கள் கருத்து சொன்னபோது அரசியல் கட்சியாக எப்போது மாறுகிறோமோ அப்போது நமது தனித்தன்மையை இழந்து விடுவோம். ஆளும் கட்சிக்கு அல்லது நமக்கு தற்காலிகமாக ஆதரவு தரும் கட்சிக்கு நாம் சாதகமாக பேச ஆரம்பித்து விடுவோம்.என்ற கருத்தை ஆணித்தரமாக சொல்லி அவர் அதற்கு அங்கீகாரம் தரவில்லை.
ஆனாலும் காலத்தின் கட்டாயம் அப்படி அரசியல் கட்சியாக மாறி சட்ட மன்றத்துக்குள் நுழைந்தால்தான் முஸ்லிம்களுக்குண்டான உரிமைகளை பேசி வென்றெடுக்க முடியும் என்ற உண்மையையும் நாம் நினைத்துப் பார்க்கிறோம்.
முஸ்லீம் லீக்கும் இதற்கு விதி விலக்கல்ல. சில கொள்கைகளை சமரசம் செய்ய வேண்டியும் வருகிறது.
ஆனால் தமிழ் நாட்டு முஸ்லீம் முன்னேற்றக கழகத்திலிருந்து மனித நேய மக்கள் கட்சி பிறந்தது. அதிலிருந்து உடைந்து மனித நேய ஜனநாயக கட்சி யாக ஒன்று புதிதாக பிறந்தது. ஒரு கட்சி கலைஞருக்கும் இன்னொரு கட்சி அம்மாவுக்கும் ஆதரவு தெரிவித்து தங்கள் நிலைப் பாட்டை தக்க வைத்துக் கொண்டார்கள்.
ஆனால் சமுதாயத்தில் 100 ஆண்டுகளுக்கு மேலாக கோலோச்சி வரும் முஸ்லீம் லீக்குக்கும் அதனால் பின்னடைவு ஏற்பட்டது.
எனவே ஊர் விஷயத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சிகள் ஊர் அமைப்பான முஸ்லீம் ஐக்கிய பேரவையின் முயற்சிகளுக்கு தார்மீக ஆதரவு அளிக்க வேண்டும் அல்லது ஒதுங்கி இருக்க வேண்டும். இப்படி அபத்தமாக கருத்து தெரிவிப்பது மாற்று மத சகோதரர்களுக்கு ஒரு சாக்காக அமைந்து விடும்.
தனிப்பட்ட முறையில் மனித நேய ஜனநாயக கட்சிக்கு இது சாதகமாக இருக்கலாம். ஆனால் முஸ்லீம் சமுதாயத்துக்கு ''தன் பல்லைக் குத்தி தானே நாற்றம் பார்க்கும்'' கதை போல் ஆகிவிடும். அவர்கள் கருத்தை நேரடியாக ஐக்கிய பேரவைக்கு சென்று கூறியிருக்கலாம். இப்படி வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டிருப்பது ஐந்தாம் படை என்று சொல்வார்களே அந்த ரகத்தை சேர்ந்ததாகவே மக்கள் கருத இடமுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross